புவனகிரி அருகே அறுவடைக்குத் தயாரானநெற்பயிரில் புகையான் நோய் தாக்குதல். - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday, 4 January 2024

புவனகிரி அருகே அறுவடைக்குத் தயாரானநெற்பயிரில் புகையான் நோய் தாக்குதல்.


கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே சிறுகாலூர் கிராமம் உள்ளது.இங்கு சிறுகாலூர், புனவாசல், மணக்குடியான்இருப்பு உள்ளிட்ட கிராமங்களில் விவசாயிகள் நானூறு ஏக்கருக்கு மேல் சம்பாநெல்லை பயிரிட்டுள்ளனர். பல இடங்களில் கடன் பட்டு பயிரிட்ட சம்பா நெல் சாகுபடி தற்போது அறுவடையை நெருங்கியிருக்கிறது. 

இவ்வாறான நிலையில் நெற்பயிரில் புகையான் நோய் கடுமையாக தாக்கி வருகின்றன. இன்னும் சிலநாட்களில் அறுவடை துவக்கிவிடலாம். அதற்கடுத்து வாங்கிய கடனை அடைத்து விடலாம் என்று நினைத்திருந்த விவசாயிகளுக்கு புகையான் நோய்தாக்குதல் அவர்களுக்கு பேரிடியாக தாக்கிவருகிறது. சம்பா நெற்பயிர்கள் வயலில் சாய்ந்து பதராகி வருவதால் கடுமையான மகசூல் பாதிப்பு, பொருளாதார இழப்பு ஏற்படுத்தி வருவதாக  விவசாயிகள் குறிப்பிடுகிறார்கள் ஆய்வு செய்ய வரும் அதிகாரிகளோஏதாவது ஒரு மருந்து பெயரைச்சொல்லி நெற்பயிரில் பூச்சித்தாக்குதலுக்கு அடிக்கசொல்கிறார்கள். 


இப்படி ஒவ்வொரு விவசாயியும் நான்கு முதல் ஐந்து தடவைக்குமேல் மருந்தடித்தும் புகையான் நோய்தாக்குதலை கட்டுப்படுத்த முடியவில்லை.இத்தனைக்கும் விவசாயிகள் நெல் பயிரிடுவதிலிருந்து அறுவடைவரை அத்தனைக்கும் வேளாண்மைத்துறை அதிகாரிகளின் பரிந்துரையின்பேரில்தான்  நெற்பயிருக்கு பராமரிப்புப் பணிகளை செய்கிறார்கள். அப்படி செய்தும் நெற்பயிருக்குபாதிப்பு வருவதைத் தடுக்க முடியவில்லை.இதற்கு மேல்  நாங்கள் என்ன செய்வது என கேட்கும் விவசாயிகள் நெற்பயிரில் ஏற்பட்டுள்ள புகையான்  நோய்தாக்குதலை கணக்கீடு செய்து பாதிக்கப்பட்டிருக்கும் தங்களுக்கு சரியான இழப்பீடு தர வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கின்றனர்.

No comments:

Post a Comment

*/