காட்டுமன்னார்கோவில் அருகே சரியான இடத்தில் பாலம் கட்ட வில்லை என்று கிராமமக்கள் குற்றம்சாட்டி சரியான இடத்தில் அமைக்க கோரிக்கை. - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday, 5 January 2024

காட்டுமன்னார்கோவில் அருகே சரியான இடத்தில் பாலம் கட்ட வில்லை என்று கிராமமக்கள் குற்றம்சாட்டி சரியான இடத்தில் அமைக்க கோரிக்கை.


கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே அறந்தாங்கி கிராமம் உள்ளது. இந்த கிராமப்பேருந்து நிறுத்தத்தின் வழியாக விக்கிரவாண்டி- தஞ்சை நான்கு வழி சாலைப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் அறந்தாங்கி கிராமத்தின் பேருந்து நிறுத்தத்தில் உயர்மட்ட மேம்பாலம் அமைக்க வேண்டும் என கிராம மக்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர். ஆனால் இங்கு அமைய வேண்டிய உயர்மட்ட பாலம் கிராமத்திலிருந்து ஒரு கிலோ மீட்டர் தூரம் தள்ளி அமைக்கப்பட்டு வருகிறது . தற்போது பாலம் அமைந்துள்ள பகுதி யாருக்கும் பயனற்று இருக்கிறது.

இதனால் அறந்தாங்கி, மற்றும்  இதன் உள்பகுதியில் உள்ள சென்னிநத்தம், அகரபுத்தூர் உள்ளிட்ட ஏழெட்டு கிராம மக்களின் வாழ்வாதாரம் பாதிப்பு அடைகிறது. அறந்தாங்கி கிராமப் பேருந்து நிறுத்தத்திலேயே உயர் மட்ட பாலம் அமைக்க வேண்டும். என்று கூறும் கிராம மக்கள் இப்பகுதி கிராமங்களில் இருந்து பள்ளி கல்லூரி வேலைக்கு செல்வோர் என நூற்றுக்கணக்கானவர்கள் பேருந்து நிறுத்த வழியாகத்தான் செல்கிறார்கள். அது மட்டுமல்லாமல் இப்பகுதியில் உள்ள அனைத்து கிராமங்களிலும் தேக்கு, சவுக்கு, பல்வேறு பூச்செடிகள் உள்ளிட்ட நர்சரி செடிகள் இங்கிருந்துதான் தமிழகம் மற்றும் பல்வேறு மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்கின்றனர்.


அதனால் அவற்றின் போக்குவரத்துகளும்  பாதிப்படைகிறது. கிராமத்திற்குள் செல்லும் பேருந்து போக்குவரத்தும் நிறுத்தப்பட்டுள்ளது. முக்கியமாக பள்ளி கல்லூரிமற்றும் வேலைக்கு செல்லும் பெண்களின் பாதுகாப்பு கருதிபாலத்தை  அறந்தாங்கி கிராமத்தின் பேருந்து நிறுத்தத்திலேயே  அமைக்க வேண்டும் என்று கிராம மக்கள் வேண்டுகோள் வைக்கின்றனர்.

No comments:

Post a Comment

*/