புவனகிரி, சிதம்பரம் தொகுதியில் நடைபெற்ற பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் என்மண் என்மக்கள் யாத்திரை. - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday, 26 January 2024

புவனகிரி, சிதம்பரம் தொகுதியில் நடைபெற்ற பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் என்மண் என்மக்கள் யாத்திரை.


கடலூர் மாவட்டம் புவனகிரி சிதம்பரம் தொகுதிகளில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் என் மண் என்மக்கள் யாத்திரை மிக விமரிசையாக நடைபெற்றது சிதம்பரத்தின் நான்கு வீதிகளைச் சுற்றி நடைபயணமாக வந்த பாஜக தலைவர் அண்ணாமலைக்கு மக்கள் உற்சாக வரவேற்பளித்தனர்.பின்னர் புவனகிரி தொகுதியில் கீரப்பாளையம் எல்லையானவெள்ளாற்று பாலத்தில் தொடங்கி புவனகிரி கடைவீதி வழியாக நடை பயணம் மேற்கொண்டு வழியில் உள்ள புகழ்பெற்ற ஸ்ரீ ராகவேந்திரர் ஆலயத்திற்குச் சென்று வழிபட்டார். 

அந்த ஆலயத்தில் அவருக்கு பூர்ண கும்ப மரியாதை வழங்கப்பட்டது . பின்னர்புவனகிரி பேருந்து நிலையத்தில் யாத்திரையை நிறைவு செய்தார். வழி நெடுகிலும் மக்கள் பூக்களைத் தூவியும், சால்வை அழித்தும், மாலை அணிவித்தும், செல்ஃபி எடுத்துக் கொண்டும், இரு கரம் கூப்பி வணங்கியும், உற்சாக வரவேற்பு அளித்தனர். பேருந்து நிலையத்தில் மக்களிடையே பேசிய மாநிலத் தலைவர் அண்ணாமலை புதிய கல்விக் கொள்கையின் படி தாய்மொழி தமிழ் , இரண்டாவது மொழிஆங்கிலம் தவிர்த்து மூன்றாவதாக எந்த ஒரு தேசிய மொழியையும் கற்றுக் கொள்ளலாம் என்பதை தமிழக அரசு கடைபிடிக்காததால் வெளிமாநிலங்களில் சென்று பணியாற்றும்தமிழர்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது. 


ஆனால் ஆட்சியாளர்கள் நடத்துகின்ற தனியார் ஆங்கிலப்பள்ளிகளில் மூன்றாவதாக ஹிந்தி மொழியையும் கற்றுத் தருகிறார்கள். அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு மட்டும் இந்த மூன்றாவது மொழி மறுக்கப்படுவது நியாயம் அல்ல என்றும் தமிழகத்தில் சாமானிய மக்களுக்கு ஒரு சட்டமும் ஆட்சியாளர்களுக்கு ஒரு சட்டமூலமாக இருக்கிறது என்றுகூறினார்.


இந்த மாவட்டத்தின் அமைச்சர் நமது என்மண் என்மக்கள் யாத்திரையை தடுப்பதிலே காட்டுகிற அக்கரையை இந்தப் பகுதிகளில் நிலத்தடி நீர் குறைந்து கடல் நீர் நிலத்தை நோக்கி வந்து குடிதண்ணீரும் விவசாயத்திற்கு பயன்படும் நீரும் உப்பு நீராக மாறிக் கொண்டிருப்பதை தடுப்பதில் அக்கறை காட்டவில்லை மற்றும் பேருந்தில் பெண்களுக்கு இலவசம் என்று கூறிவிட்டு மற்றவர்களுக்கு அனைத்து பேருந்து கட்டணத்தத்தையும் உயர்த்தி விட்டார்கள்என்றும் முன்பெல்லாம் தவறாக எழுதினால்தான் பத்திரிக்கையாளரை தாக்குவார்கள். இப்போது உண்மையை சொன்னதற்கே வெட்டுகிறார்கள் என்பதையும் குறிப்பிட்டு குற்றம் சாட்டிப் பேசினார்.


சந்தர்ப்பவாத கூட்டணியான ஐ.என்.டி.ஏ கூட்டணி நாளுக்கு நாள் உடைந்து தேய்ந்து கொண்டே வருகிறது. நாளடைவில் அது முழுவதுமாகவே காணாமல் போய்விடும். மீண்டும் மோடி தான் 2024லும் பிரதமர் ஆவார் என்றும் பேசினார். சிதம்பரம், புவனகிரி பகுதியில் இரண்டு முறை நடைபயணம் செல்ல தேதி குறித்து அது தள்ளிப் போய் மூன்றாவது முறையாக இன்று நிறைந்த பௌர்ணமியும், தைப்பூசமும், ராகவேந்திரருக்கு உகந்த குருவாரமான வியாழக்கிழமையும் சேர்ந்து வருவதால் கடவுள் இன்று தான் புவனகிரியில் நடைபயணம் வரவேண்டும் என்று நிச்சயத்து விட்டார் போலும்! ஆனாலும் இவ்வளவு பேர் மக்கள் வெள்ளமாய் திரண்டு வந்து எங்களுக்கு பேராதரவு கொடுத்திருப்பதை மகிழ்ச்சியோடு வரவேற்கிறேன் என்றும் மகிழ்ச்சி பொங்க கூட்டத்தினரிடையே உரையாற்றினார்.


இதில் கடலூர் மேற்கு மாவட்டத் தலைவர் மருதை, மாநிலத் துணைத் தலைவர் ஏ.ஜிசம்பத், பட்டியல் அணி மாநிலத்தலைவர் தடா பெரியசாமி,  பட்டியல் அணி மாநில துணைத்தலைவர் வெற்றிவேல், ஒன்றியத்தலைவர்கள் நாகராஜன், ராஜா,  மேற்கு மாவட்டச் செயலாளர் திருமாவளவன், மாவட்டப் பொருளாளர் முருகன், ஓபிசி அணி மாநில நிர்வாகி தியாகு உள்ளிட்ட மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர அணிப் பிரிவு நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர். 

No comments:

Post a Comment

*/