தேமுதிக சார்பில் வடலூர் தைப்பூச விழாவில் மாபெரும் அன்னதானம். - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday, 26 January 2024

தேமுதிக சார்பில் வடலூர் தைப்பூச விழாவில் மாபெரும் அன்னதானம்.


வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன் என கூறிய வள்ளலாரின் தைப்பூச ஜோதி தரிசன பெருவிழா விழா வடலூரில் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது இதில் ஒரு பகுதியாக தைப்பூச ஜோதி தரிசன விழாவை காண வரும் பொது மக்களுக்கு வடலூர் நகர தேமுதிக சார்பில் மாபெரும் அன்னதானம் வழங்கப்பட்டது.

தேமுதிக வடலூர் நகர செயலாளர் சாகிர் உசேன் தலைமையில் நடைபெற்ற சிறப்பு அன்னதான விழாவில் சிறப்பு அழைப்பாளராக மருத்துவர் லோகநாதன் மற்றும் தேமுதிக மாவட்ட அவைத்தலைவர் ராஜாராமன், மாவட்ட பொருளாளர் AP ராஜ் ஆகியோர் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கி தொடங்கி வைத்தனர் நிகழ்வில் குறிஞ்சிப்பாடி தேமுதிக ஒன்றிய செயலாளர் சக்திவேல், வேல்முருகன் மாநில பொதுக்குழு உறுப்பினர் சுமோ சுரேஷ் வடலூர் நகரத் தலைவர் பசுபதி, துணை செயலாளர்கள் ஏழுமலை, ரவி கந்தன், பன்னீர்செல்வம் மாவட்ட பிரதிநிதி எஸ். வேல்முருகன், சுரேஷ் குமரவேல், சங்கர், கொளக்குடி ஜோசப் ,தம்பி பட்டை ஜோதி, தேமுதிக மாவட்ட  மாணவரணி செயலாளர் எழிலரசன்  தாஸ், ராஜா, ராமச்சந்திரன், ராமமூர்த்தி உன்கிட்ட நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர், நிகழ்ச்சியில் சுமார் 300க்கும் மேற்பட்ட நபர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

No comments:

Post a Comment

*/