கடலூர் மாவட்டம் புவனகிரி பேரூராட்சி அதிமுக பதினெட்டாவது வார்டு கவுன்சிலராக ஜெயப்பிரியா ரகுராமன் இருந்து வருகிறார். இவரது வார்டில் கடந்த பல மாதங்களாக குடிநீரில் சாக்கடை நீர் கலந்து வருவதால் குடியிருப்பு வாசிகள் கடும் அவதியிலும்,துயரத்திலும் இருந்து வருகின்றனர். மேலும் குடியிருப்புகளை ஒன்றிணைக்கும் கழிவு நீர் வாய்க்கால் தூர்வாராமல் இருந்து வருவதாகவும் இதனால் கொசுத் தொல்லையும் இருந்து வருவதாகவும் கூறுகின்றனர்.
இதுகுறித்து புவனகிரி பேரூராட்சி மன்ற நிர்வாகத்திடம் முறையிட்டும் சரியான நடவடிக்கை இல்லை என்று கூறிஅதிமுக 18வது வார்டு கவுன்சிலர் ஜெயப்பிரியா ரகுராமன் மற்றும் அந்தவார்டு பகுதி மக்கள் ஒன்றிணைந்து பேரூராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து புவனகிரி கடலூர் சாலையில் சாலை மறியல் செய்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
No comments:
Post a Comment