குள்ளஞ்சாவடி காவல் நிலைய எல்லைக்குட்டப்பட்ட குள்ளஞ்சாவடியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் கடலூர் மாவட்ட குற்ற ஆவண காப்பக காவல் துணை கண்காணிப்பாளர் M.நாகராஜன் , தலைமையில் மனிதநேய வாரவிழா நடத்தப்பட்டது.
இவ்விழாவில் குறிஞ்சிபாடி வட்டாட்சியர் சுரேஷ்குமார், வழக்கறிஞர் திருமார்பன், அஸ்மா அறக்கட்டளை நிர்வாகி மௌலவி ராஜ் முஹம்மத் உமரி மன்பஈ, முனைவர் ராஜா, அரசு கலைக்கல்லூரி கடலூர், மஞ்சக்குப்பம் அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் கவிதாயினி திருமதி.வெற்றிசெல்வி, சமூகநீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு காவல் ஆய்வாளர் திருமதி.தீபா, குள்ளஞ்சாவடி காவல்நிலைய காவல் ஆய்வாளர் திருமதி. பாண்டிசெல்வி, புள்ளியல் ஆய்வாளர் ச.ரவிசங்கர் ஆகியோர் மனிதநேயம் பற்றியும், உதவி என்று வருவோர்க்கு நம்மால் முடிந்த உதவிகளை செய்ய வேண்டும், சாதி மத வேறுபாடியின்றி அனைவரையும் மனிதநேயத்துடன் அணுக வேண்டுமென்றும், பிறருக்கு உபத்திரம் செய்யாமல் இருப்பதும் மனிதநேயமாகும் என்ற கருத்துரைகளை எடுத்து கூறினார்கள்.
இந்நிகழ்ச்சியில் சமூகநீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவை சார்ந்த காவலர்கள் மற்றும் குள்ளஞ்சாவடி பகுதியை சார்ந்த ஊர் முக்கியஸ்தர்கள் திரளாக சுமார் 300 நபர்கள் கலந்துக்கொண்டனர். இவ்விழா முடிவில் உதவி ஆய்வாளர் பாலசந்தர் நன்றியுரை கூறினார்.
No comments:
Post a Comment