கடலூரில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து சிறப்பாக பணியாற்றியதற்காக ஒயாசிஸ் தனியார் தொண்டு நிறுவன தலைவர் எப்சிபா தவராஜ் க்கு கடலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் அருண் தம்புராஜ் மற்றும் கடலூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ராஜாராம் ஆகியோர் சிறந்த பணிக்காண விருதினை வழங்கி சிறப்பித்தனர்.
ஒயாசிஸ் சிறப்பு பள்ளியை சார்ந்த மாற்று திறனாளி மாணவர்கள் குடியரசு தின விழாவில் நடைபெற்ற கலை நிகழ்ச்சியில் உயிர் நீத்த தேச தலைவர்களுக்கும் ராணுவ வீரர்களுக்கும் வீர வணக்கம் என்ற தலைப்பில் சிறப்பான நடன நிகழ்ச்சி நடத்தினர். மாற்று திறனாளிகளின் நிகழ்ச்சியினை பொதுமக்கள் அரசு அதிகாரிகள் சமூக ஆர்வலர்கள் கண்டு களித்தனர், மேலும் ஒயாசிஸ் சிறப்பு பள்ளி மாணவர்களின் நடன நிகழ்ச்சியை பார்வையிட்ட கடலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அருண் தம்புராஜ் பாராட்டி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் இரண்டாம் பரிசினை வழங்கினார் உடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இராஜாராம் மற்றும் அதிகாரிகள் பள்ளி மாணவர்கள் உடன் இருந்தனர்.
No comments:
Post a Comment