இந்தியா குடியரசு துணைத்தலைவர் ஜக்தீப் தன்கர் அவர்கள் குடும்பத்துடன் இரண்டு நாள் பயணமாக நேற்று 28ந் தேதி ஞாயிற்றுக்கிழமை புதுச்சேரி வந்த அவர்கள் இன்று காலை ஹெலிகாப்டர் மூலம் சிதம்பரம் வந்து கார் மூலம் நடராஜர் கோயிலில் சாமி தரிசனம் செய்த பின்னர் அங்கிருந்து பரங்கிப்பேட்டையில் உள்ள பாபாஜி கோயிலில் சாமி தரிசனம் செய்தனர்.
அப்போது பேரூராட்சி மன்ற தலைவர் தேன்மொழி சங்கர் குடியரசு துணைத் தலைவர் மற்றும் அவர்களது குடும்பத்தினரை நேரில் சந்தித்து சால்வை அணிவித்தும் பூங்கொத்தை வழங்கியும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர் இதில் பேரூராட்சி மன்ற செயல் அலுவலர் திருமூர்த்தி.பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் முஹம்மது யூனுஸ்.திமுக மாவட்டம் பிரதிநிதி சங்கர் உடன் இருந்தனர்.
- செய்தியாளர் சாதிக் அலி.
No comments:
Post a Comment