கடலூர் மாவட்டம் வடலூரில் உள்ள வள்ளலார் நிறுவிய சத்திய ஞான சபை வளாகத்தில் 153வது ஜோதி தரிசனம் திருவிழா வருகின்ற 25.01.24 அன்று நடைபெற உள்ளது, விழாவை காண தமிழக மட்டுமல்லாது வெளி மாநிலத்தைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் தைப்பூச நாளில் வள்ளலார் சபை அமைந்துள்ள விருதாச்சலம் கடலூர் நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படாத வண்ணம் போக்குவரத்து மாற்றம் குறித்து பல்வேறு துறையை சார்ந்த அதிகாரிகள் மற்றும் காவல் துறையினர் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டம் வடலூர் வள்ளலார் சத்ய ஞான சபை வளாகத்தில் நெய்வேலி சரக துணை காவல் கண்காணிப்பாளர் சபியுல்லா அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில் வருவாய்த்துறை, காவல்துறை, நெடுஞ்சாலைத்துறை, மின்வாரியம், தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறை, நகராட்சி நிர்வாகம், இந்து அறநிலையத்துறை, தீயணைப்பு துறை, சுகாதாரத்துறை ஆகிய துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் தைப்பூச போக்குவரத்து மாற்றம் குறித்த விளக்க வரைபடம் மூலம் மாற்றம் செய்யப்பட்டுள்ள தற்காலிக போக்குவரத்து குறித்த விளக்கங்களை நெய்வேலி சரக காவல்துறை கண்காணிப்பாளர் சபியுல்லா அவர்கள் எடுத்துரைத்தார், மேலும் பல்வேறு துறையைச் சார்ந்த அதிகாரிகள் போக்குவரத்து நெரிசல் குறித்து வழங்கிய ஆலோசனையையும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
No comments:
Post a Comment