கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே மஞ்சக்கொல்லை கிராமம் உள்ளது. இக்கிராமம் மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் உள்ள விவசாயிகள நெல்கொள்முதல் நிலையம் திறக்கவேண்டும் என அதிகாரிகளுக்கு கோரிக்கை வைத்தனர். இப்பகுதிகளில் பல்வேறு இடங்களில் மழையால் சம்பாநெல் வயல்களில் நெற்கதிர்கள் தரையில்சாய்ந்து மழை நீரில் மூழ்கி சேதமேற்பட்டு வந்தன.
அதனால் அதிகம் சேதம் ஏற்படுவதை தடுக்க உடனடியாக நெல்கொள்முதல் நிலையம் திறக்கவேண்டும் என சுமார் நூற்றுக்கணக்கான விவசாயி கள் கோரிக்கை வைத்து வலியுறுத்தி வந்தனர். அதன்படி விவசாயிகளின் கோரிக்கை ஏற்றுக்கொண்ட அதிகாரிகள் மஞ்சக்கொல்லை கிராமத்தில் விருத்தாசலம் & புவனகிரி நெடுஞ்சாலையோரம் உள்ள திடலில் நெல் கொள்முதல் நிலையத்தை திறந்துள்ளனர்.
முறைப்படியான பூஜைகள் போடப்பட்டு நெல்கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டுள்ளது. இதனை வரவேற்றுள்ள விவசாயிகள் மழையால் பாதிப்படைந்த விவசாயிகளின் நெல்களுக்கு முன்னுரிமை அளிக்கவேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
No comments:
Post a Comment