நெய்வேலி என்எல்சி இந்தியா நிறுவனம், கொடுத்த இடத்தில், வழிபாடு செய்து வந்த கோயிலை இடித்து, சாலை அமைக்க முயற்சி செய்ததை தடுத்து நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள். - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday, 23 January 2024

நெய்வேலி என்எல்சி இந்தியா நிறுவனம், கொடுத்த இடத்தில், வழிபாடு செய்து வந்த கோயிலை இடித்து, சாலை அமைக்க முயற்சி செய்ததை தடுத்து நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்.


கடலூர் மாவட்டம் நெய்வேலி அருகே உய்யக்கொண்டராவி கிராம மக்களின் வீடு மற்றும் நிலங்களை, கடந்த 2008 ஆம் ஆண்டு, என்எல்சி இந்தியா நிறுவனத்தால் கையகப்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. அதற்கு மாற்று இடமாக, என்எல்சி தலைமை அலுவலகம் அருகே அமைந்துள்ள இந்திரா நகர் B1 மாற்றுகுடியிப்பில் வீடுகள் வழங்கப்பட்டது. கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக இப்பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வரும் நிலையில்,  அவர்களின் குலதெய்வமான அக்னி வீரனை வழிபாடு செய்வதற்காக என்எல்சி இந்தியா நிறுவனம் இடம் கொடுத்துள்ளது.  

இந்நிலையில் என்எல்சி இந்தியா நிறுவனம், வழிபாடு செய்வதற்காக கொடுக்கப்பட்ட இடத்தை இடித்துவிட்டு, சாலை அமைப்பதற்காக ஜேசிபி இயந்திரத்துடன் வந்துள்ளனர். இதனை அறிந்த அப்பகுதி மக்கள் ஜேசிபி இயந்திரத்தை தடுத்து நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். ஏற்கனவே தங்களின் வாழ்வாதாரத்தை இழந்து, உரிய இழப்பீடு,  நிரந்தர வேலை வாய்ப்பு இல்லாமல் தவித்து வரும் நிலையில், கொடுக்கப்பட்ட இடத்தை,  மீண்டும் என்எல்சி நிர்வாகம் கைப்பற்ற முயற்சிப்பது அராஜகத்தின் உச்சபட்சம் எனவும், காலங்காலமாக வழிபாடு செய்து வந்த தங்கள் குலதெய்வத்தை இடிக்க முயற்சி செய்வதற்கு கண்டனம் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். 


இது குறித்து தகவல் அறிந்த நெய்வேலி  காவல்துறையினர், பொதுமக்களிடம் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதன் பேரில் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


- வீ. வினோதினி நெய்வேலி செய்தியாளர்.

No comments:

Post a Comment

*/