கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்று சக்கர மோட்டார் சைக்கிள் வழங்கும் விழா நடைபெற்றது. அதிமுக நகர கழக செயலாளர் எஸ்.ஆர்.மணிகண்டன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கடலூர் மேற்கு மாவட்ட செயலாளரும், புவனகிரி அதிமுக சட்டமன்ற உறுப்பினருமான அருண்மொழிதேவன் பங்கேற்று பதினோரு மாற்றுத் திறனாளிகளுக்கு மூன்று சக்கர மோட்டார் சைக்கிள்களை வழங்கினார்.
பின்னர் ஒருவருக்கு செயற்கை காலும் வழங்கப்பட்டது இந்த நிகழ்ச்சியில் கடலூர் மேற்கு மாவட்ட அம்மா பேரவை செயலாளர் உமா மகேஸ்வரன், கடலூர் மாவட்ட இளைஞரணித் தலைவர் வீரமூர்த்தி, புவனகிரி மேற்கு ஒன்றியச் செயலாளர் சீனிவாசன், கீரப்பாளையம் கிழக்கு ஒன்றியச் செயலாளர் விநாயகமூர்த்தி, கீரப்பாளையம் மேற்கு ஒன்றியச் செயலாளர் கருப்பன், சேத்தியாதோப்பு நகர துணைச் செயலாளர் சம்பத் சேத்தியாத்தோப்பு முன்னாள் நகரச் செயலாளர் நன்மாறன், சேத்தியாத் தோப்பு பேரூராட்சியின்1வது வார்டு செயலாளர் கேபிஜி. கார்த்திகேயன் மற்றும் மாவட்ட,, ஒன்றிய, நகர கிளைக்கழக அதிமுக நிர்வாகிகள் கட்சித் தொண்டர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர். மாவட்ட ஊனமுற்றோர் நல சங்க துறை சார்ந்த அதிகாரிகளும் உடன் இருந்தனர்.
No comments:
Post a Comment