நெய்வேலி கேந்திர வித்யாலயா பள்ளியில் மாணவர்களுக்கான ஓவிய போட்டி நடைபெற்றது. - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday, 23 January 2024

நெய்வேலி கேந்திர வித்யாலயா பள்ளியில் மாணவர்களுக்கான ஓவிய போட்டி நடைபெற்றது.


கடலூர் மாவட்டம் நெய்வேலி வட்டம் மூன்றில் கேந்திர வித்யாலயா பள்ளி  இயங்கி வருகிறது இப்பள்ளியில் கடலூர் மாவட்டத்தில் உள்ள 13 பள்ளிகளை சேர்ந்த 100 மாணவர்கள் பங்கேற்ற ஓவியப்போட்டி நடைபெற்றது. இந்த ஓவிய போட்டியானது இந்திய சுதந்திர போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அவர்களை நினைவு கூறுவதற்கு  ஆகவும்  பாரத பிரதமர்  நரேந்திர மோடி அவர்கள் மாணவர்கள் எதிர்காலத்தில் தேர்வை எதிர்கொள்வது எப்படி என 13 மொழிகளில் புத்தகம் வெளியிட்டுள்ளார்.

மேலும் மாணவர்கள் தேர்வை பயமின்றியும் திறம்படவும் எதிர்கொள்ள இந்த ஓவிய போட்டி நடைபெற்றது, இந்த ஓவிய போட்டி  பள்ளியின் முதல்வர் மன் பிரீத் மற்றும் ஆசிரியர்கள் அஞ்சும் அக்தர் மற்றும் ஆசிரியைகள் விஜயா மற்றும் பல்வேறு பள்ளி ஓவியர் ஆசிரியர்கள் பல்வேறு பள்ளி மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

*/