கடலூர் மாவட்டம் புவனகிரியில் அமைந்துள்ள புகழ்பெற்ற அருள்மிகு அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலயத்தில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. முன்னதாக பல்வேறு நதிகளில் இருந்து கொண்டுவரப்பட்ட புனித நீர் யாகசாலையில் வைத்து சிவாச்சாரியாரின் வேத மந்திரங்கள் முழங்க பூஜை செய்யப்பட்டது.
கடந்த 19ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று முதல் கால யாகசாலை வேள்வி தொடங்கி ஆறு காலங்களாக சிவாச்சாரியாரரின் வேத மந்திரங்கள் முழங்க புனித நீருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது அதனைத் தொடர்ந்து இன்று பம்பை ஓசை முழங்க மேல தாளங்களோடு யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட புனித நீர் ஊர்வலமாக கொண்டுவரப்பட்டு அங்காள பரமேஸ்வரி அம்மன் கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.
புகழ்பெற்ற அருள்மிகு அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலயத்தில் நடைபெற்ற கும்பாபிஷேக விழாவில் சுற்று வட்டார பகுதிகளிலிருந்து வந்திருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று கும்பாபிஷேக விழாவை கண்டுகளித்து சென்றனர் மேலும் கும்பாபிஷேக விழாவில் பங்கேற்ற பக்தர்களுக்கு அன்னதானங்கள் வழங்கப்பட்டது.
No comments:
Post a Comment