வடலூர் சத்திய ஞான சபையில் 153வது ஜோதி தரிசன பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday, 24 January 2024

வடலூர் சத்திய ஞான சபையில் 153வது ஜோதி தரிசன பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.


கடலூர் மாவட்டம் வடலூரில் வள்ளலார் நிறுவிய சத்திய ஞான சபை உள்ளது கடலூர் மாவட்டத்தின் முக்கிய ஆன்மீக ஸ்தலமாக  விளங்கும் வள்ளலார் சத்திய ஞான சபையில் 153 வது ஜோதி தரிசன பெருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.


முன்னதாக பார்வதிபுரம் கிராம மக்கள் தாங்கள் கொண்டு வந்த சீர்வரிசை பொருட்களுடன் வள்ளலார் பயன்படுத்திய பொருட்கள் அடங்கிய பேழை சத்ய ஞான சபைக்கு கொண்டுவரப்பட்டது இதனைத் தொடர்ந்து சத்திய ஞான சபை வளாகத்தின் அருகே உள்ள கொடிக்கம்பத்தில் வள்ளாலாரின் சன்மார்க்க கொடி ஏற்றப்பட்டது 


சன்மார்க்க கொடி ஏற்றப்பட்டபோது அங்கு கூடியிருந்த பொதுமக்கள் மற்றும் சன்மார்க்க அன்பர்கள்  அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி என்ற வள்ளலாரின் தாரக மந்திரத்தை உச்சரித்தனர், தொடர்ந்து வள்ளலார் பயன்படுத்திய பொருட்கள் அடங்கிய பேழை சபை வளாகத்தை சுற்றி எடுத்துவரப்பட்டது. 153 வது தைப்பூச ஜோதி தரிசன விழா வெகு விமர்சையாக கொடியேற்றத்துடன் தொடங்கியதை தொடர்ந்து நாளை 25.01.24 முக்கிய நிகழ்வான வள்ளலார் சத்திய ஞான சபையில் ஜோதி தரிசன பெருவிழா நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.


- தே.தனுஷ் குறிஞ்சிப்பாடி செய்தியாளர் 8667557062.

No comments:

Post a Comment

*/