கடலூர் மாவட்ட பொதுமக்கள் குறைதீர்வு கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.அ.அருண் தம்புராஜ், தலைமையில் நடைபெற்றது. - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday, 23 January 2024

கடலூர் மாவட்ட பொதுமக்கள் குறைதீர்வு கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.அ.அருண் தம்புராஜ், தலைமையில் நடைபெற்றது.


கடலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில் பொதுமக்கள் குறைகேட்புநாள் கூட்டம் அனைத்துத் துறை அலுவலர்களுடன் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.அ.அருண் தம்புராஜ், தலைமையில் (22.01.2024) நடைபெற்றது. இக்கூட்டத்தில் குடும்பஅட்டை, முதியோர் உதவித்தொகை, மாற்றுதிறனாளிகள் உதவித் தொகை, பட்டா, நிலஅளவை போன்ற பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை பொதுமக்கள் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களிடம் நேரில் அளித்தனர்.


இன்று நடைபெற்ற குறைதீர்வு கூட்டத்தில், பட்டா தொடர்பாக 124 மனுக்களும், ஆக்கிரமிப்பு தொடர்பாக 105 மனுக்களும், முதியோர் உதவித்தொகை தொடர்பாக 36 மனுக்களும், குழந்தைகள் கல்வி உதவித்தொகை தொடர்பாக 34 மனுக்களும், ஊரக வளர்ச்சி துறை தொடர்பான 60 மனுக்களும், காவல்துறை தொடர்பாக 102 மனுக்களும், தையல் இயந்திரம் கோரி 33 மனுக்களும், வேலைவாய்ப்பு தொடர்பாக 35 மனுக்களும், மாற்றுத்திறனாளி நல அலுவலகம் தொடர்பாக 23 மனுக்களும், இதர மனுக்கள் 168 ஆக மொத்தம் 720 மனுக்கள் வரப்பெற்றன.

பொதுமக்கள் அளித்த மனுக்களை தீர ஆராய்ந்தும், களஆய்வு செய்தும், விதிமுறைகளுக்குட்பட்டும் துரிதமாக நடவடிக்கை மேற்கொண்டு மனுதாரருக்கு தீர்வு வழங்க வேண்டும், மேலும் உதவித்தொகை, கழிப்பறை, வீடு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்தான மனுக்களை உடனடியாக பரிசீலனை செய்து தீர்வு காணவேண்டும். பொது மக்களின் குறைதீர்ப்பது தான் நம்முடைய தலையாய கடமையாகும். அவ்வாறு அவர்கள் அளிக்கும் மனுக்கள் மீது காலம் தாழ்த்தாமல் அரசு விதிமுறைகளுக்கு உட்பட்டு விரைந்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். 


மேலும் இக்கூட்டத்தில் அனைத்து துறை அலுவலர்களுக்கும் துறை ரீதியாக மேஜைகள் அமைக்கப்பட்டு, பொதுமக்கள் அளித்த மனுக்கள் மீது சம்மந்தப்பட்ட துறை மூலம் உடனடியாக விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இன்று நடைபெற்ற குறைதீர்வு கூட்டத்தின் வாயிலாக 6 மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு தலா ரூ.1,06,000 மதிப்பீட்டில் மொத்தம் ரூ.6,36,000 மதிப்பீட்டிலான பேட்டரியால் இயங்கும் சிறப்பு சக்கர நாற்காலிகளையும், 18 வயது நிறைவடைந்த மனவளர்ச்சி குன்றிய 7 மாற்றுத்திறனாளிகளின் உறவினர்களுக்கு பாதுகாவலர் சான்றினையும், வருவாய்த்துறை சார்பில் 1 பயனாளிக்கு இலவச மனை பட்டாவிற்கான ஆணையும் வழங்கினார்.


கடலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தினால் நடத்தப்பட்ட இலவச போட்டி தேர்வு பயிற்சி வகுப்பில் கலந்துகொண்டு TNPSC Group 2 முதல்நிலை மற்றும் முதன்மை தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மற்றும் TNUSRB PC தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களை பாராட்டி மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் சிறப்பு பரிசினை வழங்கினார். இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ம.ராஜசேகரன் அவர்கள் மற்றும் அனைத்துத் துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர். 

No comments:

Post a Comment

*/