தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை தமிழக அரசின் எச்சரிக்கையையும் மீறி கடைகளில் விற்பனை செய்ததை தங்களது ஆய்வின் மூலம் கண்டறிந்த உணவுப் பாதுகாப்புத் துறை அலுவலர்களும், போலீசாரும் கடைக்காரர்களின் கடைகளைப் பூட்டி சீல் வைத்தனர். சீல் வைத்ததுடன் புகையிலைப் பொருட்களை உபயோகிப்பதால் மனிதர்களுக்கு ஏற்படும் உடல் நோய்கள் பற்றிய விவரத்தைக் கூறி இனிமேல் இதுபோன்ற புகையிலைப் பொருட்களைவிற்பனை செய்யக்கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டது.
அதன்படி சோழத்தரத்தில் இரண்டு கடைகளுக்கும், பேரூரில் இரண்டு கடைகளுக்கும், நந்தீஸ்வர மங்கலத்தில் ஒரு கடைக்கும், பாளையங்கோட்டையில் மூன்று கடைகளுக்கும், சின்னக் கானூரில் ஒரு கடைக்கும் என மொத்தம் எட்டு கடைகளுக்கு இன்று (09/01/2024) சீல் வைக்கப்பட்டது. உணவு பாதுகாப்பு அலுவலர் நல்லதம்பி தலைமையில் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ராமமூர்த்தி, சுகாதார ஆய்வாளர் அழகேசன் முன்னிலையில் போலீசாரும் உடன் பங்கேற்க மேற்கண்ட எட்டு கடைகளுக்கும் சீல் வைக்கப்பட்டது.
No comments:
Post a Comment