கடலூர் மாவட்டம் நெய்வேலி அருகே உள்ள சேப்பளாநத்தம் பகுதியில் செங்குளம் ஏரி உள்ளது, இந்த ஏரியிலிருந்து அப்பகுதியை சுற்றியுள்ள சுமார் 100 ஏக்கர் அளவிலான விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றனர், கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பாக தமிழக அரசின் பொதுப்பணி துறையின் மூலம் ஏரி தூர்வாரப்பட்டதாக கூறப்படும் நிலையில் நேற்று இரவு முதல் கடலூர் மாவட்டத்தில் இடைவிடாமல் பெய்து வரும் தொடர் மழை காரணமாக ஏரி தற்போது முழுவதுமாக நிரம்பியுள்ளது இதனால் மழைநீரானது விளை நிலங்களில் பாய்ந்து வருகின்றது ஏரியைச் சுற்றியுள்ள சுமார் 10 ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள மணிலா செடிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் குமுறுகின்றனர்.
ஏரியிலிருந்து நீர் வெளியேறி செல்லும் வாய்க்காலை தனிநபர் ஆக்கிரமித்துள்ளதால் மழைநீர் வழிந்து வெளியே செல்ல முடியாமல் தங்கள் விளை நிலங்கள் வழியாக பாய்ந்து வருவதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர் மாவட்ட நிர்வாகம் என் மீது கவனம் கூர்ந்து நீர் வழிப் பாதையை ஆக்கிரமிப்பு செய்துள்ள நபர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளவும் மழை நீரை வெளியேற படிகால் வசதி ஏற்பாடு செய்து தரவும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
No comments:
Post a Comment