கடலூர் மாவட்டம் வடலூர் அருகே மேட்டுக்குப்பம் கிராமத்தில் ஞானாலாயா வள்ளலார் கோட்டம் மற்றும் அண்ணா பல்கலைக்கழகம் இணைந்து வள்ளல் பெருமானின் நாடு நம் வீடு கிராம மேம்பாட்டு திட்டம் தொடக்க விழா நிகழ்ச்சி நடைபெற்றது.
முன்னாள் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜோதிமணி தலைமை நடைபெற்ற விழாவில் ஞானாலயா வள்ளலார் கோட்டம் நிறுவனர் ஞானானந்த சுவாமிகள் திட்டம் குறித்து பொதுமக்கள் மத்தியில் எடுத்துரைத்தார். கடலூர் எஸ்.பி. ராஜாராம், என்.எல்.சி. பொது மேலாளர் செந்தில்குமார், அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் (பொறுப்பு) பிரகாஷ் ,முன்னாள் கூடுதல் பதிவுத்துறை தலைவர் ஆறுமுக நாயனார், டி ஆர் எம் சாந்தி பர்னிச்சர் மாரியப்பன் உட்பட பலரும் கலந்து நிகழ்ச்சியில் கொண்டனர். மேட்டுக்குப்பம் கிராமத்தை நாடு வீடு திட்டத்தின் கீழ் சுகாதாரம், பசுமை, மற்றும் அனைவருக்கும் கல்வி கிராம பொருளாதார தன்னிறைவு அடிப்படை தன்நிறைவு முதியோரை பேணுதல், தர்ம சாலை அமைத்தல் உட்பட பல்வேறு திட்டங்களை செயல்படுத்த உள்ளது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment