வெறுப்பை விலக்கி அன்பை விதைக்க வேண்டும் என்கிற நோக்கத்தோடு இந்திய மக்கள் நாடக மன்றத்தின் முன்னெடுப்பில் இந்திய அளவில் பல அமைப்புகள் ஒன்று கூடி கலைப்பயணம் நடத்தி வருகின்றன. அதன் ஒரு பகுதியாக நேற்று சனிக்கிழமை கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை பேருந்து நிலையத்திற்கு இக்கலை குழு வந்தடைந்தது அங்கு நாடக நிகழ்ச்சிகள். தப்பாட்டம் போன்ற பல் வேறு கலை நிகழ்ச்சி நடைபெற்றது இதையடுத்து துவங்கிய கலை நிகழ்ச்சியை பரங்கிப்பேட்டை பேரூராட்சி மன்ற தலைவர் தேன்மொழி சங்கர் அவர்கள் துவக்கி வைத்தனர்.
இந்நிகழ்ச்சியில் பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் முஹம்மது யூனுஸ்.திமுக நகர செயலாளர் முனவர் உசேன். மாவட்ட பிரதிநிதி சங்கர். கழக நிர்வாகிகள்.இஸ்லாமிய ஐக்கிய ஜமாத் தலைவர் ஹமீது அப்துல் காதர். இஸ்லாமிய ஐக்கிய ஜமாத் நிர்வாகிகள். பரங்கிப்பேட்டை வர்த்தக சங்கம் தலைவர் ஆனந்தன். செயலாளர் சாலியா மரைக்காயர் வர்த்தக சங்கம் நிர்வாகிகள். விடுதலை சிறுத்தை கட்சி நிர்வாகிகள்.CPM மாநில செயற்குழு ரமேஷ். ஒன்றிய செயலாளர் விஜய். நகர செயலாளர் வேல்முருகன் சிறுபான்மை நலக்குழு மாவட்டத் துணைத் தலைவர் அசன் முஹம்மது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள். பயனாளர் நல சங்கம் தர்மம் செய்வோம் குழுமம் நிர்வாகிகள். பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் . அருள் முருகன். செழியன். ராஜேஸ்வரி வேல்முருகன். மமக தமுமுக நிர்வாகிகள். கடலோர மக்கள் வாழ்வுரிமை இயக்கம் நிர்வாகிகள். பேருந்து நிலையம் ஆட்டோ சங்கம் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்
- செய்தியாளர் சாதிக் அலி.
No comments:
Post a Comment