பின்னர் விழா மேடையில் அவர் பேசும்போது தற்போது தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என்றும் கண்ணியமிக்க காவல்துறை கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் எடப்பாடியார் முதல்வராக இருந்தபோது கண்ணியமாக தங்களது கடமையை சரியாகவே செய்தனர் என்றும் தெரிவித்தார்.. மேலும் அதிமுக ஆட்சியில் கொடுக்கப்பட்ட தாலிக்குத் தங்கம், மாணவர்களுக்கு மடிக்கணினி, அம்மா கிளினிக், ஸ்கூட்டி வாகனம் கொடுக்கும் திட்டம் போன்ற பெண்களுக்கும், மாணவர்களுக்கும் கொடுக்கப்பட்ட மிக அருமையான திட்டங்கள் அனைத்தையும் இந்த அரசு நிறுத்திவிட்டது என்றும் வருத்தமாகக் கூறினார்.
மேலும் தங்கள் ஆட்சியில் மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கையை கூட்டியதாகவும், நீட் தேர்வினால் தமிழக மாணவர்கள் பாதிக்கப்படாத அளவுக்கு அரசு பள்ளிகளில் 7.5% இட ஒதுக்கீடு கொண்டு வந்து ஆண்டுக்கு சுமார் 500 மாணவர்கள் அளவுக்கு மருத்துவ படிப்புக்கு அனுப்பி வைத்ததாகவும் பெருமைப்பட பேசினார். ஒரே கையெழுத்தில் நீட் தேர்வை ரத்து செய்வோம் என்று கூறியவர்கள் இன்று 50 லட்சம் கையெழுத்துக்களை வாங்கி வைத்து என்ன செய்யப் போகிறார்கள்? என்றும் கேள்வி எழுப்பினார்.
இந்தக் கூட்டத்தில் கழக செய்தி தொடர்பாளர் அதிவீரராம பாண்டியன், சேத்தியாத்தோப்பு நகரச் செயலாளர் எஸ். ஆர். மணிகண்டன், கீரப்பாளையம் கிழக்கு ஒன்றிய செயலாளர் விநாயகமூர்த்தி கீரப்பாளையம்,மேற்கு ஒன்றியச் செயலாளர் கருப்பன், கம்மாபுரம் தெற்கு ஒன்றிய செயலாளர் மருதை முனுசாமி, கம்மாபுரம் வடக்கு ஒன்றிய செயலாளர் சின்ன ரகுராமன்,புவனகிரி நகர செயலாளர் செல்வகுமார், புவனகிரி கிழக்கு ஒன்றிய செயலாளர் சீனிவாசன், கடலூர் மேற்கு மாவட்ட அம்மா பேரவை செயலாளர் உமா மகேஸ்வரன், கடலூர் மேற்கு மாவட்ட மாணவர் அணித் தலைவர் வீரமூர்த்தி உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் பெருந்திரளானோர் மற்றும் பல்வேறு பகுதிகளில் இருந்து வருகை தந்த ஆயிரக்கணக்கான பொதுமக்களும் பங்கேற்றனர்.
No comments:
Post a Comment