மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் பிறந்த நாள் விழா. - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday, 22 January 2024

மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் பிறந்த நாள் விழா.


மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் பிறந்த நாளை முன்னிட்டு முன்னாள் தொழில்துறை அமைச்சரும் அதிமுக கடலூர் வடக்கு மாவட்ட  செயலாளர் எம் சி சம்பத் முதுநகர் பகுதியில் உள்ள 30,31,32 வார்டுகளில் அதிமுக கட்சி கொடியை ஏற்றியும் வண்டிப் பாளையம் பகுதியில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர் பின்னர் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் எம்ஜிஆர் பிறந்த நாளை முன்னிட்டு நடத்தப்பட்ட கோலப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கினார்.


பின்னர் கொன்டாங்கி ஏரியின் கரையில் 100க்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நட்டார் அப்போது திமுக மாநாடு குறித்து செய்தியாளர்கள் கேட்டபோது ஆளுங்கட்சியாக இருந்தும் அவர்கள் எதிர்பார்த்த மாதிரி மாநாட்டில் கூட்டம் இல்லை என்றும் எல்லாம் குடும்ப நிகழ்ச்சிபோல இருக்கிறது என்றும் அதிகாரபலத்தின் பிள்ளை என்பதால் அனைத்து அமைச்சர்களும் விழுந்து அடித்து வேலை செய்கிற கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ள காட்சிகளை காணமுடிகிறது மாநாடு வெற்றி பெற்ற மாநாடு இல்லை மதுரையில் நடைபெற்ற அதிமுக மாநாடு மிக மிக வெற்றி பெற்று வெற்றி விழா மாநாடாக இருந்தது இந்த மாநாடு வெற்றியில்லா மாநாடாக உள்ளது என்று கூறினார்.

இந்நிலையில் மாநில மீனவர் அணி கே.என்.தங்கமணி, சேவல் ஜி.ஜெ.குமார், ஆர்.வி.ஆறுமுகம், கே.காசிநாதன், வழக்கறிஞர் பாலகிருஷ்ணன், வேல்முருகன், கிரிஜா செந்தில் குமார், நிகழ்ச்சி ஏற்பாடுகளை முதுநகர் பகுதி செயலாளர் வ.கந்தன் வார்டு செயலாளர்கள் செந்தில், சின்னதுரை, பழனி, மற்றும் செல்வகுமார், வடிவேல், கார்த்திக், சந்தோஷ், பரசுராமன், நாகராஜ், ஹரிஹரன் சீனிவாசன் மற்றும் ஏராளமான அதிமுகவினர் உடனிருந்தனர்.

No comments:

Post a Comment

*/