வள்ளலார் சித்திபெற்ற மேட்டுக்குப்பத்தில் திருஅறை தரிசனம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday, 28 January 2024

வள்ளலார் சித்திபெற்ற மேட்டுக்குப்பத்தில் திருஅறை தரிசனம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


கடலூர் மாவட்டம் வடலூரில் வள்ளலார் நிறுவிய சத்திய ஞான சபையில் 153-வது ஆண்டு தைப்பூச திருவிழா கடந்த 24-ம் தேதி கொடியேற்றப்பட்டு 25-ம் தேதி ஜோதி தரிசனம்  நடைபெற்றது. 


இதனை தொடர்ந்து, வள்ளலார் சித்திபெற்ற மேட்டுக்குப்பத்தில் திருஅறை தரிசனம்  நடைபெற்றது. இதையொட்டி வடலூர் சத்தியஞானசபையில் இருந்து, வள்ளலார் பயன்படுத்திய பொருட்கள் கொண்ட பெட்டி மற்றும் உருவப்படம் பூக்களால் அலங்கரிக்கப்பட்டு வள்ளலார் நடந்து வந்த பாதை வழியாக பல்லாக்கில் மேளதாளம் முழங்க ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது. வழி நெடக்கும் அந்த கிராம மக்கள் பழத்தட்டுகள் ஏந்தி வள்ளலார் திருவுருவப்படத்தை பல்லக்கில் வருவதற்கு தீபாரதனை  காட்டப்பட்டு பின்னர் மேட்டுக்குப்பம் வள்ளலார் சித்திபெற்ற திருவறை உள்ள சித்திவளாக திருமாளிகை கொண்டு செல்லப்பட்டது அங்கு கிராம மக்கள் சார்பில் பழங்கள் மற்றும் பூக்களுடன் திரண்டு வந்து வரவேற்பளித்தனர். 

பின்னர் வள்ளலார் சித்திபெற்ற திருஅறையினுள்ள வள்ளலார் பயன்படுத்திய பொருட்கள் கொண்டு செல்லப்பட்டது தொடர்ந்து திருஅறை தரிசனம் தொடங்கியது.  இதில் ஆயிரகணக்கான பொதுமக்கள் மற்றும் சன்மார்க்க அன்பர்கள் கலந்து கொண்டு தரிசனம் மேற்கொண்டனர்  பக்தர்களின் வசதிக்காக வடலூர் பகுதியில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது. மேட்டுக்குப்பம் பகுதியில் மாபெரும் அன்னதானம் வழங்கப்பட்டது, ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டனர் . 


- தே.தனுஷ் குறிஞ்சிப்பாடி செய்தியாளர் 866755706

No comments:

Post a Comment

*/