நெய்வேலியில் புரட்சித்தலைவரின் பிறந்த நாளை முன்னிட்டு, நலத்திட்ட உதவிகளும், ஏழை எளிய மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday, 18 January 2024

நெய்வேலியில் புரட்சித்தலைவரின் பிறந்த நாளை முன்னிட்டு, நலத்திட்ட உதவிகளும், ஏழை எளிய மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.


புரட்சித்தலைவர் எம்ஜிஆரின் 107 ஆம் ஆண்டு பிறந்த நாளை முன்னிட்டு, கடலூர் மாவட்டம் நெய்வேலி என்எல்சி அண்ணா தொழிற்சங்கம் சார்பில், வட்டம் - 9 -ல் உள்ள புரட்சித் தலைவரின் திருவுருவ சிலைக்கு, தாரை தப்பட்டையுடன்,   கடலூர் தெற்கு மாவட்ட செயலாளரும், கழக அமைப்பு செயலாளருமான சொரத்தூர். ராஜேந்திரன் தலைமையில்,  மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர் ஏழை எளிய மக்களுக்கு பசியாற அன்னதானமும்,  ஏழை எளிய மக்களுக்கு வேஷ்டி சேலை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளும் வழங்கினார்.  

இந்நிகழ்வில் முன்னாள் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் சிவசுப்பிரமணியன், என்எல்சி அண்ணா தொழிற்சங்க செயலாளர் கோவிந்தராஜ், தலைவர் வெற்றிவேல் மற்றும் என்எல்சி அண்ணா தொழிற்சங்க நிர்வாகிகள், தகவல் தொழில் நுட்ப அணி நிர்வாகிகள், மகளிர் அணி நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டனர். 


- தே.தனுஷ் குறிஞ்சிப்பாடி செய்தியாளர் 8667557062

No comments:

Post a Comment

*/