மேலும் போக்குவரத்து அதிகம் மிகுந்த நேரத்தில் இப்பாலத்தில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது வழக்கமாக இருந்தது, விக்கிரவாண்டி கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலை விரிவாக்க பணி தற்போது நடைபெற்று வருவதால் பழைய பாலம் அருகே புதிய பாலம் கட்டும் பணி நடைபெற்று வந்தது, நிலையில் கிறிஸ்துமஸ் பொங்கல் ஆகிய நாட்களில் தொடர் விடுமுறை காரணமாக சொந்த ஊர்களுக்கு செல்லும் மக்கள் இப்பாலத்தை அதிக அளவில் கடப்பதில் சிக்கல் ஏற்பட்டது.
இந்நிலையில் கடலூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் துரித நடவடிக்கையால் நெய்வேலி என்எல்சி இந்தியா நிறுவனம் மற்றும் தேசிய நெடுஞ்சாலை துறை சார்பில் புதிய பாலம் கட்டும் இடத்தில் தற்காலிகமாக போக்குவரத்து நெரிசலை தடுக்க மாற்றுப்பாதை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த மாற்று பாதை ஏற்பாட்டால் வாகன நெரிசலை குறைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது, மாற்றுப் பாதையை ஏற்பாடு செய்ய துரித நடவடிக்கை மேற்கொண்ட என்எல்சி நிர்வாகம்,தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரிகள், கடலூர் மாவட்ட ஆட்சியர் டாக்டர் அருண் தம்புராஜ், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இராஜாராமன் உறுதுணையாக இருந்த நெய்வேலி சரக காவல்துறை துணை கண்காணிப்பாளர் சபியுல்லா, வடலூர் காவல் ஆய்வாளர் ராஜா ஆகியோருக்கு பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் வாகன ஓட்டிகள் தங்களது பாராட்டுகளை குவித்தெரிவித்தனர்.


No comments:
Post a Comment