அதிமுக தொண்டர்கள் சார்பில் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் அவர்களின் 107 வது பிறந்த தினம் தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் கடலூர் மாவட்டம் நெய்வேலி என்எல்சி இந்தியா லிமிடெட் நிறுவன பொது மருத்துவமனையில் எம்.ஜி.ஆரின் பிறந்த நாளை முன்னிட்டு அதிமுக ஊழியர் சங்க மருத்துவமனை பகுதி செயலாளர் சோமையா அவர்கள் ஏற்பாட்டில் மருத்துவமனையில் உள்ள மகப்பேறு சிகிச்சை பிரிவில் பிறந்த பந்தகானி மிதுன் குமார்-காக்கனுரி பார்வதி தம்பதியினரின் ஆண் குழந்தைக்கு 1/2கிராம் தங்க நாணயம் வழங்கப்பட்டது.
தொடர்ந்து மருத்துவமனை வளாகத்திற்கு வெளியே பொதுமக்களுக்கு அதிமுக தொழிற்சங்க தலைமை நிர்வாகிகள் கோவிந்தராஜ், வெற்றிவேல் தலைமையில் மாபெரும் அன்னதானம் வழங்கப்பட்டது, நிகழ்வில் அண்ணா தொழிற்சங்க நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.

No comments:
Post a Comment