புவனகிரி அடுத்த கீரப்பாளையத்தில் முதலமைச்சரின் சாலை விரிவாக்கத் திட்டத்தின் கீழ் நான்கு வழி சாலையாக அகலப்படுத்தும் பணிக்கு வேளாண் நலத்துறை அமைச்சர் எம். ஆர். கே. பன்னீர்செல்வம் பூமி பூஜை துவக்கி வைத்தார்.
கடலூர் மாவட்டம், கீரப்பாளையம் பகுதியில் கீரப்பாளையம் முதல் வயலூர் இருவழித்தட சாலையை முதலமைச்சரின் சாலை விரிவாக்க திட்டதின்கீழ் ரூ.20.80 கோடி மதிப்பீட்டில் நான்குவழித்தடமாக அகலப்படுத்தும் பணியினை மாண்புமிகு வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் திரு.எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அவர்கள் துவங்கிவைத்தார். உடன் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.அ.அருண் தம்புராஜ், இ.ஆ.ப திரு.இரா.இராஜாராம் அவர்கள், சிதம்பரம் சார் ஆட்சியர் செல்வி ரஷ்மி ராணி,இ.ஆ.ப., ஆகியோர் உள்ளனர்.
- மாவட்ட செய்தியாளர் சக்திவேல்.
No comments:
Post a Comment