கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே கீழநத்தம் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் 1000த்திற்கும் மேற்பட்ட ஏக்கர் நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கி கடுமையான பாதிப்பு அடைந்தது. இது குறித்து அறிந்த கடலூர் மேற்கு மாவட்டச் செயலாளரும், புவனகிரி அதிமுக சட்டமன்ற உறுப்பினருமான அருண்மொழித்தேவன் நேரில் சென்று மழைநீர் பாதித்த நெல் வயலில் இறங்கி ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது அவர் தற்போது தமிழகத்தில் ஏற்பட்டுள்ள மழை பாதிப்பு என்பது நெல் கரும்பு உள்ளிட்ட அனைத்து வகை பயிர்களையும் கடுமையாக சேதப்படுத்தியுள்ளது. இது கடந்த 130 ஆண்டுகளில் ஏற்பட்ட மூன்றாவது பாதிப்பு என ஆய்வுகள் தெரிவிக்கின்றன எனவும், அரசு விவசாயிகளை வஞ்சிக்காமல் அவர்களை காப்பாற்ற முன்வர வேண்டும், கரும்பு பயிரிட்டவர்கள் கரும்பில் ஏற்பட்ட நோய் தாக்குதல்களால் சமாளிக்க முடியாமல் பாதிப்படைந்து வேறு பயிர் சாகுபடிக்கு மாறி விட்டனர் எனவும் , அதனால் நெல் பயிரிட்டு பாதிப்படைந்த விவசாயிகளுக்கும் மற்றும் கரும்பு பயிர் சேதம் அடைந்த விவசாயிகளுக்கும் என்று அனைத்து விவசாயிகளுக்கும் இழப்பீடு வழங்க வேண்டும் என அவர் தெரிவித்தார்.
No comments:
Post a Comment