புவனகிரியில் நியாய விலை கடைகளில் பொங்கல் சிறப்பு தொகுப்பு மற்றும் பல்வேறு நலத்திட்ட உதவிகளை பொதுமக்களுக்கு வேளாண்மை நலத்துறை அமைச்சர் வழங்கினார்.
கடலூர் மாவட்டம், புவனகிரி வட்டம், கீழ்புவனகிரி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் கீழ் இயங்கும் நியாயவிலைக்கடையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாண்புமிகு வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் திரு.எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அவர்கள் கடலூர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மூலம் இந்து மலைக்குறவர் குழுவிற்கு ரூ.3.60 இலட்சம் மதிப்பீட்டிலான காசோலையை வழங்கினார். உடன் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.அ.அருண் தம்புராஜ், இ.ஆ.ப., அவர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.இரா.இராஜாராம் ஆகியோர் உள்ளனர்.
- மாவட்ட செய்தியாளர் வீ.சக்திவேல்.
No comments:
Post a Comment