வடலூர் தைப்பூச ஜோதி தரிசன விழாவில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸ்காரரை தாக்கிய 6 இளைஞர்களை போலீசார் கைது செய்தனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை காவல் நிலையத்தில் இரண்டாம் நிலை காவலராக பணிபுரிபவர் பாண்டுரங்க மகன் ரமேஷ் (32) இவர் வள்ளலார் தைப்பூச ஜோதி தரிசன விழாவில் கல்பட்டி அய்யா நகர் பகுதியில் நேற்று இரவு 7 மணிக்கு பாதுகாப்பு பணியில் இருந்தார்.
அப்போது வடலூர் கோட்டக்கரை பகுதி சேர்ந்த ஜான் மகன் ராமலிங்கம் (18), என்பவர் அங்கு தைப்பூச விழாவிற்கு வந்த பெண்களை கிண்டல் செய்துள்ளார். இதனை போலீஸ் ரமேஷ் தட்டிக் கேட்டுள்ளார். இதில் ஆத்திரமடைந்த ராமலிங்கம் அவரது நண்பர்கள் கொள்ளுக்காரன்குட்டையை சேர்ந்த அய்யாவு மகன் ரவி (23), வடலூர் ராஜசேகர் மகன் பரஞ்சோதி (23), பார்வதிபுரம் ராஜா மகன் கௌரிசங்கர் (21), மணியரசன் சூரியகுமார் (22 ), 17 வயது சிறுவன், ஆகிய 6 பேரும் அவரை அசிங்கமாக திட்டி, தாக்கியுள்ளனர்.
இது குறித்து ரமேஷ் வடலூர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து இராமலிங்க (18), அவரது நண்பர்கள் ரவி (23), பரஞ்சோதி (23), 17 வயது சிறுவன், கௌரிசங்கர் (21), சூரிய குமார் (22) ஆகிய 6 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
No comments:
Post a Comment