இவர்களில் சரி பாதிக்கும் மேல் என்.எல்.சிக்காக நிலமும் வீடுகளை அளித்தவர்கள் அவர்களுக்கு என்.எல்.சி நிர்வாகம் முறையாக பணி வழங்கவில்லை சமீபத்தில் நடைபெற்ற வேலை நிறுத்தத்தின் போது சென்னை உயர்நீதிமன்றம் 8வாரத்திற்குள் இவர்களின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டுமென்று மத்திய அரசுக்கு உத்தரவு பிறப்பித்திருந்தது ஆனாலும் மத்திய அரசின் எந்தத் துறையும் இது பற்றி கவலை கொள்ளவில்லை ஒப்பந்த தொழிலாளர்களின் போராட்டம் நீடித்துக் கொண்டிருக்கிறது சம வேலைக்கு சம ஊதியம் என்ற சட்டத்தை என்எல்சி நிர்வாகம் மதிக்கவில்லை இரண்டு ஆண்டுகளில் 480 நாள் பணிபுரிந்தவர்களை பணி நிரந்தரம் செய்யும் சட்டமும் அமலாக்க வில்லை எனவே நீதிமன்ற தீர்ப்பும் தொழிலாளர் நலத்துறை சட்டமும் கேட்பாரற்று கிடைக்கிறது தொழிலாளர்களின் போராட்டத்திற்கு செவி சாய்க்காததால் சட்டத்தின் ஆட்சியை நிலை நிறுத்த வேண்டும் என்று ஜனவரி 26 ஆம் தேதி கருப்புக்கொடியோடு தனது குடும்பத்துடன் என்எல்சி தலைமை அலுவலகத்தின் முன்னால் முற்றுகைப் போராட்டம் நடத்தப் போவதாக முடிவு எடுத்து இருக்கிறார்கள்.
அதே போல மத்திய அரசும் மாநில அரசும் மிகப்பெரிய எண்ணிக்கையில் தொழிலாளர்கள் இருக்கக்கூடிய பொதுத்துறை இந்தியாவிலேயே ஆண்டு ஒன்றுக்கு 3000 கோடி ரூபாய் லாபம் ஈட்டக்கூடிய என்எல்சி நிறுவனம் அதற்காக உழைத்த தொழிலாளர்களை சட்டப்படி பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பதில் அக்கறை செலுத்தாததால் வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் என்எல்சி பொதுத்துறை நிறுவனம் மட்டும் எந்த சட்டத்திற்கும் கட்டுப்படாமல் இருக்கிறது மாவட்ட ஆட்சி நிர்வாகம் அழைத்தும் வரவில்லை தொழிலாளர் துறை பேச்சு வார்த்தையில் பங்கேற்கவில்லை நீதிமன்றத்தின் தீர்ப்பையும் அலட்சியப்படுத்துகிறது.
எனவே சட்டத்தின் ஆட்சி இங்கு இல்லை என்பதை வலியுறுத்தும் வகையில் அங்கு பணிபுரியும் 10 ஆயிரத்துக்கும் அதிகமான ஒப்பந்த தொழிலாளர்கள் தங்களது குடும்பம் மற்றும் உறவினர்களோடு வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலை புறக்கணிப்பதாக முடிவு எடுத்து இருக்கிறார்கள் அதை 26 ஆம் தேதி பகிரங்கமாக அறிவிப்பதற்கு அவர்கள் தயாராக உள்ளனர் ஏற்கனவே வேலை நிறுத்தம் செய்யும்போது கடலூர் மாவட்ட ஆட்சியர் நீதிமன்றத்தின் உத்தரவு படி இருதரப்பும் கட்டுப்பாட்டோடு இருக்கும் என்று எழுத்துப்பூர்வமான நிபந்தனையை கேட்டுப் பெற்றார் தொழிற்சங்கத்தின் சார்பிலும் தொழிலாளர்கள் சார்பிலும் நீதிமன்றத்தின் தீர்ப்பிற்கு கட்டுப்படுவதாக எழுதிக் கொடுத்தோம் என்எல்சி நிர்வாகமும் எழுதிக் கொடுத்தது ஆனால் அதை நிறைவேற்றவில்லை எனவே அன்று இரவில் இருந்து வேலை நிறுத்தம் செய்வதற்கு உண்டான அறிவிப்பை நோட்டீஸ் ஆக அனுப்பி இருந்தோம் இந்த நாடு ஜனவரி 26 ஆம் தேதி விடுதலையான நேரத்தில் அந்த விடுதலைக்கான பயன்களை சட்ட ரீதியாகவும் தார்மீக ரீதியாகவும் என்எல்சி தொழிலாளர்கள் நிலம் கொடுத்தவர்கள் விவசாயிகள் அனுபவிக்கவில்லை எனவே என்எல்சியில் தொடர்ந்து போராட்டங்கள் தீவிரமடைந்இது கொண்டிருக்கிறது.
ஜனவரி 26 ஆம் தேதி குடும்பத்தோடு தொழிலாளர்கள் தங்களது எதிர்ப்பைக் காட்டுகின்ற வகையில் கருப்புக்கொடியோடு என்எல்சி நிறுவனத்தின் தலைமை அலுவலகம் முன்பு போராட்டம் நடத்துகிறார்கள் இதற்குப் பிறகாவதுமித்திய மாநில அரசுகள் தலையிடுமா என்று தெரியவில்லை இத்தகவலை குடியரசுத் தலைவர், பாரத பிரதமர், இந்திய தலைமை தேர்தல் ஆணையர், உச்சநீதிமன்இற தலைமை நீதிபதி ஆகியோருக்கு எதற்காக தேர்தல் புறக்கணிப்பு அதற்குண்டான காரணங்களை விளக்கி மனு அனுப்புவதாக முடிவெடுத்து இருக்கிறோம் இன்று என்எல்சி ஜீவா ஒப்பந்த தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பிலும் போராட்டக் குழு சார்பிலும்மேலும் தெரியப்படுத்துவதாக கூறினார்.
மேலும் அவர் பேசுகையில்நான் கையகப்படுத்த உத்தரவிடுகிறது. அதை அக்கறையுடன், மனிதாபிமானமற்ற முறையில் நிலத்தை பிடுங்கி கொடுக்கின்றனர். ஆனால் நிலம் கொடுத்த விவசாயிகளின் மகனுக்கு வேலை வாங்கி கொடுப்பதில் அந்த அளவுக்கு வேகத்தையும் விவேகத்தையும் மாநில அரசு காட்டவில்லை. மாநில அரசு, மத்திய அரசின் கட்டுப்பாட்டில் செயல்படுவது போல் தெரிகிறது. எனவே என்.எல்.சி. தொழிலாளர்களின் கோரிக்கையை நிறைவேற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment