குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வெளியேறும் அவலம் நடவடிக்கை மேற்கொள்ள பொதுமக்கள் கோரிக்கை. - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday, 18 January 2024

குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வெளியேறும் அவலம் நடவடிக்கை மேற்கொள்ள பொதுமக்கள் கோரிக்கை.


கடலூர் மாவட்டம் வடலூர் நகராட்சிக்கு உட்பட்ட வார்டு 27 பகுதியில் உள்ள பிள்ளையார் கோயில் எதிரே சென்னை கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில்  வடலூர் நகராட்சி சார்பில் அமைக்கப்பட்ட குடிநீர் குழாயில் ஏற்பட்ட உடைப்பு காரணமாக பொதுமக்களுக்கு வடலூர் நகராட்சி மூலம் விநியோகிக்கப்படும் குடிநீர் அதிக அளவில் அவ்வப்போது வெளியேறி வீணாகி வருகிறது.

வடலூர் நகராட்சி சார்பில் விநியோகிக்கப்படும் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளதால் அதிக அளவில் குடிநீர் வீணாக்கப்படுவதாக அப்பகுதியினர் தெரிவிக்கின்றனர், மேலும் வடலூர் நகராட்சி ஊழியர்கள் அவ்வப்போது குடிநீர் குழாயில் உள்ள உடைப்பை சரி செய்ய முற்பட்ட போதிலும் அது பலனளிக்காமல் மீண்டும் குடிநீர் குழாயில் உள்ள உடைப்பு காரணமாக குடிநீர் தினமும் வெளியேறி வருவது தொடர்கதையாக உள்ளது என்று வேதனை தெரிவித்துள்ளனர் எனவே பொதுமக்களின் நலன் கருதி வடலூர் நகராட்சி நிர்வாகம் உடனடி நடவடிக்கை மேற்கொண்டு குடிநீர் குழாயில் ஏற்பட்டுள்ள உடைப்பை சரி செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. 

No comments:

Post a Comment

*/