கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி மற்றும் நெய்வேலி தொகுதிக்கு உட்பட்ட குள்ளஞ்சாவடி குறிஞ்சிப்பாடி, மீனாட்சி பேட்டை, வடலூர் வடக்குத்து ஆகிய ஐந்து இடங்களில் தேமுதிக வடக்கு மாவட்ட செயலாளர் சிவக்கொழுந்து அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் வடக்கு மாவட்ட அவை தலைவர் ராஜாராம் அவர்களின் வழிகாட்டுதலின்படி புரட்சிக் கலைஞர் தேமுதிக நிறுவன தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் திரு உருவச்சலையை நிறுவ அனுமதி வழங்க கோரி குறிஞ்சிப்பாடி ஒன்றிய செயலாளர் கே. பி.ஆர் சரவணன் தலைமையில் தேமுதிகனர் குறிஞ்சிப்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டாட்சியர் சுரேஷ்குமார் அவர்களிடம் மனு அளித்தனர்.
நிகழ்வில் தேமுதிக மாநில பொதுக்குழு உறுப்பினர் சமோ சுரேஷ், குறிஞ்சிப்பாடி மேற்கு ஒன்றிய செயலாளர் வடக்குத்து வேல்முருகன், குறிஞ்சிப்பாடி பேரூர் கழக வடலூர் நகர செயலாளர் ஜாகிர் உசேன், குறிஞ்சிப்பாடி மேற்கு ஒன்றிய பொருளாளர் ஜெயபிரகாஷ், கிழக்கு ஒன்றிய பெருமாள், குறிஞ்சிப்பாடி பேரூர் கழக அவைத்தலைவர் ஜோதி, ஒன்றிய துணை செயலாளர்கள் ஜோதி. ஜெய்சங்கர். பிரபாகரன். செல்வம். வெற்றிவேல், வேல்முருகன். நடராஜ். ஆரோக்கியராஜ். சத்யராஜ். சிவசுப்பிரமணியன். மற்றும் கழக நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.


No comments:
Post a Comment