ஸ்ரீமுஷ்ணம் அருகே பாளையங்கோட்டை மேல்பாதி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 75வது ஆண்டு குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday, 26 January 2024

ஸ்ரீமுஷ்ணம் அருகே பாளையங்கோட்டை மேல்பாதி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 75வது ஆண்டு குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது.


கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் ஒன்றியத்துக்கு உட்பட்ட பாளையங்கோட்டை மேல்பாதி தெற்கு பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நாட்டின் 75 ஆம் ஆண்டு குடியரசு தின விழா  ஊராட்சி மன்ற தலைவர் வினிதா முருகன் தலைமையில், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் குழந்தைவேலு  முன்னிலையில்  தேசியக்கொடி   ஏற்றப்பட்டது.

விழாவில் பள்ளியின் தலைமை ஆசிரியர் அனைவரையும் வரவேற்றார். விழாவில் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் பூங்கோதை மகேஷ் மற்றும் பள்ளியின் ஆசிரிய ஆசிரியர்கள், காலை மதிய  உணவு திட்ட  பொறுப்பாளர் மற்றும் பணியாளர்கள்,  பெற்றோர்கள் மாணவ மாணவிகள் ஊராட்சி செயலாளர் வார்டு உறுப்பினர்கள் இல்லம் இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்கள், மகளிர் சுய உதவி குழுக்கள்  கலந்து கொண்டனர்


இந்நிகழ்ச்சியில் மழலையர்  வகுப்பு முதல்   இருந்து எட்டாம் வகுப்பு வரை உள்ள மாணவ மாணவிகள் நடனம் ஆங்கில பேச்சு, தமிழ் பேச்சு  போன்ற கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்று அனைவரையும்  மகிழ செய்தனர்  அனைவருக்கும் நினைவு பரிசும், உருவத்தை விளையாட்டு போட்டி மற்றும் கலை விழாவில் கலந்து கொண்ட  மாணவர்களுக்கு. பரிசுகள் வழங்கப்பட்டது. 

No comments:

Post a Comment

*/