கடலூர் மாவட்டம் நெய்வேலி அருகே குறவன் குப்பம் பகுதியில் உள்ள நியூ லைட் சாரிடபிள் டிரஸ்ட் மற்றும் டிசைன் கிராஸ் மெஷின் மணவளர்ச்சி குன்றியோருக்கான சிறப்பு பள்ளியில் பொங்கல் விழா நடைபெற்றது பள்ளியின் நிறுவனர் சகாயராஜா தலைமையில் நடைபெற்ற விழாவில் பள்ளியில் சிறப்பு அழைப்பாளராக என் எல் சி இந்தியா சுரங்கம் இரண்டின் பொது மேலாளர் சஞ்சீவி அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
இதனைத் தொடர்ந்து பள்ளியில் பயிலும் மனவளர்ச்சி குன்றிய மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் தமிழர்களின் பாரம்பரிய உடை அணிந்து புதுபானையில் பொங்கல் வைத்து மகிழ்ந்தனர் பின்னர் தொடர்ந்து நடைபெற்ற கலை நிகழ்ச்சி மற்றும் போட்டிகளில் மனவளர்ச்சி குன்றிய மாணவர்கள் கலந்துகொண்டு தங்களின் திறமையை வெளிப்படுத்தினர், இறுதியில் போட்டிகளில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
- தே.தனுஷ் குறிஞ்சிப்பாடி செய்தியாளர் 8667557062
No comments:
Post a Comment