கடலூர் மாவட்டம் வடலூர் அருகே கருங்குழி பகுதியில் உள்ள தனியார் மகளிர் கல்லூரியில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது, ஜாதி மத பேதங்களைக் கடந்து அனைத்து கல்லூரி மாணவிகளும் தமிழக பாரம்பரிய முறைப்படி சேலை அணிந்து வந்து புது பானையில் பச்சரிசி, வெள்ளம் ,பால் உள்ளிட்ட பொருட்களைக் கொண்டு பொங்கல் வைத்து வழிபட்டனர் பின்னர் அனைவரும் பொங்கலோ பொங்கல் என்ற உற்சாகமாக கோஷமிட்ட தை திருநாளை வரவேற்றனர்.
தொடர்ந்து தமிழரின் பாரம்பரிய கலைகளான சிலம்பாட்டம், கும்மி பாட்டு ஆடிய மாணவிகள் பின்னர் பாடல்கள் இசைத்தவாறு பாடலுக்கு நடனமாடி மகிழ்ந்தனர்.
- நெய்வேலி செய்தியாளர் வினோதினி.
No comments:
Post a Comment