தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம், கடலூர் மண்டலத்தில் கடந்த கே.எம்.எஸ் 2022- 2023ஆம் பருவத்தில் 258 நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டு, 244062.600 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு, அதில் 31,950 விவசாயிகள் பயன் அடைந்தார்கள். மேலும், கடலூர் மாவட்டத்தில் விருத்தாசலம் மற்றும் ஸ்ரீமுஷ்ணம் ஆகிய வட்டங்களில் நடமாடும் நெல் கொள்முதல் நிலையங்கள் திறந்து வைக்கப்பட்டு 600.280 மெட்ரிக் டன் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு கே.எம்.எஸ் 2023-2024ஆம் பருவத்திற்கு தொடக்கமாக கடலூர் மாவட்டத்தில் வட்டம் வாரியாக நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டுள்ளது. காட்டுமன்னார்கோயில்-34 ஸ்ரீமுஷ்ணம் 35, விருத்தாசலம் -24, சிதம்பரம் -9, திட்டக்குடி-15, புவனகிரி-7, குறிஞ்சிப்பாடி-6, வேப்பூர்-12, கடலூர்-7, பண்ருட்டி 4 ஆக மொத்தம் 153 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு, நெல் கொள்முதல் செய்யப்படுகிறது. மேலும், நடமாடும் நெல் கொள்முதல் நிலையங்கள் விவசாயிகள் அறுவடை பகுதிக்கு சென்று 22.01.2024 முதல் விருத்தாசலம் வட்டத்தில் திறக்கப்பட்டு செயல்படுத்தப்படுகிறது. நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் சன்னா ரகம் (Grade-A) குவிண்டால் ஒன்றிற்கு ரூ.2,310/- பொதுரகம் (Common) குவிண்டால் ஒன்றிற்கு ரூ.2,265/- இவ்வாய்ப்பினை பயன்படுத்தி விவசாயிகள் நெல் மூட்டைகளை விற்பனை செய்து பயன் அடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ம.இராஜசேகரன் அவர்கள், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(பொது) ப.ஜெகதீஸ்வரன் அவர்கள், வேளாண்மை துணை இயக்குநர் / மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(வி.வ) சு.இரவிச்சந்திரன் அவாற்றும் நுகர்ப்பொருள் வாணிபக்கழக மண்டல மேலாளர் குமரவேல் அவர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment