ஸ்ரீமுஷ்ணம் த.வீ.செ. பள்ளியில் 1994ஆம் ஆண்டில் +2 படித்த முன்னாள் மாணவர்களின் 30 ஆண்டுகளுக்குப் பிறகான சந்தோஷ சந்திப்பு. - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday, 22 January 2024

ஸ்ரீமுஷ்ணம் த.வீ.செ. பள்ளியில் 1994ஆம் ஆண்டில் +2 படித்த முன்னாள் மாணவர்களின் 30 ஆண்டுகளுக்குப் பிறகான சந்தோஷ சந்திப்பு.


கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் தவீசெ மேல்நிலைப் பள்ளியில்  1994ல் பன்னிரண்டாம் வகுப்பு படித்த முன்னாள் மாணவர்கள் 30 ஆண்டுகளுக்குப் பிறகு ஒருவருக்கொருவர் சந்தித்துக் கொண்டனர். மனமெல்லாம் மகிழ்ச்சிநிறைந்த இந்தநிகழ்ச்சிக்கு புலவர் ஞானசேகரன், குப்புசாமி ஆகியோர் தலைமையற்றனர். 

தலைமை ஆசிரியர் பழமுதிர்ச்சோலை மதியழகன்,இராமலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாணவர்களின் வாகன நிறுத்தத்திற்காக முன்னாள் மாணவர்கள் கட்டிக் கொடுத்த  சைக்கிள் நிறுத்தக்  கொட்டகையில் உள்ள கல்வெட்டை பள்ளியின் செயலாளர் செந்தில்நாதன் திறந்து வைத்தார். முன்னாள் மாணவர்கள் தங்கள் குழந்தைகள் படித்தப் பள்ளியில் தங்களது குழந்தைகளுடன் வந்து கலந்துரையாடி, அன்பாகப் பழகி தங்களது பழைய நினைவுகள் அடங்கிய அனுபவங்களை பகிர்ந்து கொண்டு, தற்போது தாங்கள் செய்கின்றபணிகள், பணி புரியும் இடம், மனைவி, குழந்தைகள், குழந்தைகளின் படிப்புகள் இவைகளைப் பற்றி தங்களுக்குள் விபரங்களை பரிமாறிக் கொண்டனர். மற்றும் ஆடல் பாடலுடன் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்திக் கொண்டனர்.


இந்த நிகழ்ச்சிக்காக வெளிநாடுகளில் குடியேறியவர்கள்  நண்பர்களை சந்திப்பதற்காகவே கடல் கடந்து  இங்கே வந்து மகிழ்ச்சிக்கடலில் ஆழ்ந்தனர். இந்த நிகழ்ச்சியில் பள்ளியில் தற்போது பணியாற்றும் ஆசிரியர்கள், முன்னாள் மாணவர்கள், அவர்களின் குடும்பங்கள் இப்படி பலரும் கலந்துகொண்டனர். சந்தோஷத்தில் பெரிய சந்தோஷம் தங்களுடன் இளமை காலத்தில் உடன் பயின்ற மாணவர்களை 30 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும்சந்திப்பது தான் என்பதை நிரூபித்த இந்த முன்னாள் மாணவர்கள், மகிழ்ச்சி என்கிற வானத்தில் சிறகடித்துப் பறந்ததைப் பார்க்க முடிந்தது.

No comments:

Post a Comment

*/