தொடர்ந்து மருத்துவ வளாகத்தில் உள்ள பிரசவ அறையில் ஆய்வு மேற்கொண்ட அவர் பிரசவவார்டில் உள்ள அறுவை சிகிச்சை பிரிவு, மகப்பேறு சிகிச்சை பிரிவு, ஆகிய பகுதிகளை நேரடியாக சென்று பார்வையிட்டார் மேலும் மகப்பேறு மருத்து பிரிவு வளாகத்தில் உள்ள குடிநீர் தொட்டியை ஆய்வு செய்த அவர் கர்ப்பிணி தாய்மார்களுக்கு மற்றும் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளுக்கு முறையான வகையில் சிகிச்சை அளிக்கப்படுகிறதா என்று அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
பின்னர் மருத்துவ வளாகத்தில் உள்ள புறநோயாளிகள் பிரிவு, விபத்து மற்றும் அறுவை சிகிச்சை பிரிவு, பொது மருத்துவம் ஆண்கள் மற்றும் பெண்கள், சித்த மருத்துவ பிரிவு, நோயாளிகளுக்கு மருந்து வழங்கும் இடம் ஆகிய பகுதிகளை ஆய்வு செய்து மருத்துவமனை வளாகத்தில் அனைத்து பகுதிகளிலும் ப்ளீச்சிங் பவுடர் தெளிக்க அறிவுறுத்தினார், மேலும் மருத்துவமனையில் பராமரிக்கப்பட்டு வரும் வெளி நோயாளிகள் கையேடு மற்றும் மருத்துவர்கள் செவிலியர்கள் வருகை பதிவேட்டை ஆய்வு மேற்கொண்டார்.
ஆய்வின்போது குறிஞ்சிப்பாடி தலைமை மருத்துவ அதிகாரி தனலட்சுமி, தலைமை மருத்துவர்கள், தலைமை செவிலியர் நிர்மலா ஆகியோர் உடன் இருந்தனர்.
No comments:
Post a Comment