குறிஞ்சிப்பாடியில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நெடுஞ்சாலை துறை சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி. - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday, 31 January 2024

குறிஞ்சிப்பாடியில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நெடுஞ்சாலை துறை சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி.


கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடியில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு குறிஞ்சிப்பாடி நெடுஞ்சாலை துறை சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது, இப்பேரணியை கடலூர் மாவட்ட ஆட்சியர் டாக்டர் அருண் தம்புராஜ் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜாராம் ஆகியோர்   கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

குறிஞ்சிப்பாடி எம்ஜிஆர் சிலை அருகில் இருந்து தொடங்கிய பேரணி  பெருமாள் கோயில் மற்றும் கடைவீதி  வழியாக சென்று மீண்டும் எம்ஜிஆர் சிலை வந்நடைந்தது, பேரணியில் குறிஞ்சி பாலிடெக்னிக் கல்லூரி மாணவ, மாணவியர் ஆசிரியர்கள் மற்றும் நெடுஞ்சாலை துறை அலுவலர்கள், ஆகியோர் கலந்து கொண்டு சாலை விதிகளை மதிப்போம், விபத்தில்லா  பயணம் செய்வோம், போதையில் பயணம் நொடியில் மரணம், தலைக்கவசம் உயிர்க்கவசம் உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய  பதாகைகளை ஏந்தியவாறு பேரணியாக சென்றனர்.


மேலும் நெடுஞ்சாலை துறை சார்பில் சாலை பாதுகாப்பு வாசகங்கள் அச்சிடப்பட்ட துண்டு பிரசுரங்கள் வாகன ஓட்டிகளுக்கு வழங்கப்பட்டது நிகழ்வில் நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் ஸ்ரீகாந்த் உதவி கோட்ட பொறியாளர்கள் பரமேஸ்வரி, ராஜேந்திரன் உதவி பொறியாளர்கள் வினோத், வெங்கடேஷ் இளநிலை பொறியாளர் ஜெகன், உதவி பொறியாளர் ராஜ சுவேதா, பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் ராஜாஅரங்கநாதன் உள்ளிட்டோர்  கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

*/