கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே வெய்யலூர் கிராமத்தில் அரசு ஆதிதிராவிடர் நல ஆரம்பபள்ளி அமைந்துள்ளது. இப்பள்ளியில் தற்போது 27 மாணவர்கள் படித்து வருகிறார்கள். ஆரம்பத்தில் ஐம்பதிலிருந்து நூற்றுக்குமேற்பட்ட மாணவர்கள் படித்து வந்தனர். மாணவர்களுக்கு ஏற்றார்போல் ஆசிரியர்களும் இருந்தனர். இப்போது இப்பள்ளிக்கட்டிடம் பழமையானதால்பழுதடைந்து வருகிறது.
அதன்காரணமாக பள்ளியின் உள்பகுதியில் சிமெண்ட் காரைகள் பெயர்ந்து விழுந்து வருகிறது. கடந்த சுமார் நாற்பதாண்டுகளாக இருந்து வரும் இப்பள்ளிக்கட்டிடம் இன்றைய நிலையில் அதன் வலிமையை இழந்து வருகிறது என கிராமமக்கள் தெரிவிக்கின்றனர். பள்ளிக்கட்டிடத்தை இடித்து அகற்றிவிட்டு புதியக்கட்டிடம் கட்டித் தர வேண்டும் என கிராம மக்கள் மாவட்ட நிர்வாகம், தமிழக அரசு என பலரிடமும் கோரிக்கை வைத்ததாகக் கூறுகிறார்கள்.
தங்கள் கிராமத்துக்கு புதிய பள்ளி கட்டிடமும் அதில் கழிவறை வசதி,குடிநீர் வசதி என இவைகளை செய்து தர வேண்டும் என்றுகிராம மக்கள்தமிழக அரசுக்கு துறை சார்ந்த அதிகாரிகளுக்கு கோரிக்கை வைக்கிறார்கள்.
No comments:
Post a Comment