உத்திர பிரதேசம் மாநிலம் அயோத்தியில் இன்று ராமர் கோவில் பிரதிஷ்டை மிகப் பிரம்மாண்டமாக நடைபெற்ற நிலையில், கடலூரில் திருப்பாதிரிப்புலியூர் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் ராமர் கோவில் பிரதிஷ்டை நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது. இதில் ராம பக்தர்கள், பாஜக நிர்வாகிகள் பாஜக விளையாட்டு பிரிவு மாநில தலைவர் அமர் பிரசாத் ரெட்டி தலைமையில் கலந்து கொண்டு காணொளி காட்சி வாயிலாக கோவில் பிரதிஷ்டை கண்டு களித்தனர்.
நிகழ்வுக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், விசிக தலைவரும்,எம்பியுமான திருமாவளவன் ராமர் கோவில் குறித்து தெரிவித்துள்ள கருத்துக்கு பதில் அளிக்கையில், அவர் யார் என்றே தெரியாது எனவும் அவர்,ஒரு கேவலமான அரசியலை மேற்கொள்கிறார்.அதை நிறுத்திவிட்டு அவர் தாயார் சொன்னதை கேட்டு நடக்க வேண்டுமென தெரிவித்தார்.மேலும் இந்துக்கள் தமிழகத்தில் வாழ வேண்டுமா? வேண்டாமா என்னும் நிலை உள்ளதாகவும் ராமர் கோவில் பிரதிஷ்டையில் திமுக அரசு ஏன் இவ்வளவு இடையூறு செய்வதாகவும், உலகமே ஒரு புறம் இருக்க திமுக ஒரு புறம் நின்று உள்ளதாக தெரிவித்தார்.
மேலும் திமுக அரசு ஒரு பாசிச அரசு எனவும் தற்போது உதயநிதி தான் தமிழக முதல்வர் போன்று செயல்படுவதாகவும் கடுமையாக விமர்சித்தார். தொடர்ந்து திமுக மாநாடு ஒரு டிஸ்கோ மாநாடு எனவும் இளைஞரணி மாநாட்டில் டிஸ்கோ டான்ஸ் எதற்கு எனவும் அவர் கேள்வி எழுப்பினார். தொடர்ந்து இந்தியா முழுவதும் உள்ள விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்ட கேலோ இந்தியா விளையாட்டில் தமிழகத்தை தனியாக பிரித்தும் திராவிடம் எனவும் பாடல் இசைக்கப்பட்டது எதற்காக எனவும் கேலோ இந்தியா உங்கள் அப்பன் வீட்டு சொத்தா எனவும் அவர் கடுமையாக சாடினார்.
அப்போது கடலூர் கிழக்கு மாவட்ட தலைவர் பிரவீன் குமார் சந்திரன், புஷ்பராஜ் யோகா பாலமுருகன், வெங்கடேஷ் ஊடகப்பிரிவு மாநில செயலாளர் ஸ்ரீதர் கடலூர் கிழக்கு மாவட்ட செயலாளர் பெருமாள் கடலூர் மேற்கு மாநகரத் தலைவர் மூர்த்தி ஸ்ரீ வள்ளி விலாஸ் உரிமையாளர் பாலு செட்டியார், எலிகன்ட் ஜுவல்லரி உரிமையாளர் கோவிந்தன் கலியமூர்த்தி ஊடகப் பிரிவு மாவட்ட துணை தலைவர் டாக்டர் தி இராஜமச்சேந்திர சோழன் மற்றும் பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகள் பொதுமக்கள் பெருந்திரளக கலந்து கொண்டனர். இறுதியில் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.
No comments:
Post a Comment