அண்ணாமலை நகர் காவல் நிலைய ஆய்வாளர் திருமதி.கல்பனா அவர்கள் விசாரணை மேற்கொண்டு வழக்கில் சம்பந்தப்பட்ட முக்கூட்டு முருகன் (எ) முருகன் வயது 47 த/பெ பாலகிருஷ்ணன், மேலகுண்டலபாடி, வல்லம்படுகை, சிதம்பரம் வட்டம், கட்டை ராமலிங்கம் (எ) ராமலிங்கம் வயது 35 ஆகியோர்களை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் செய்து சிறையில் அடைக்கப்பட்டார்கள்.
கைது செய்யப்பட்ட முக்கூட்டு முருகன் என்பவர் மீது அண்ணாமலை நகர் காவல் நிலையத்தில் ரவுடி பட்டியல் பராமரிக்கப்பட்டு வருகிறது. மேலும் அண்ணாமலை நகர், சிதம்பரம் நகர், காட்டுமன்னார்கோயில், புதுச்சத்திரம், A.K. சத்திரம் , சீர்காழி புதுப்பட்டினம் ஆகிய காவல் நிலையங்களில் கொலை முயற்சி வழிப்பறி என 20 வழக்குகள் உள்ளன இவரின் குற்ற செய்கையை கட்டுப்படுத்தும் பொருட்டு கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. இரா. இராஜாராம் அவர்களின் பரிந்துரையின்பேரில் மாவட்ட ஆட்சியர் டாக்டர். A. அருண்தம்புராஜ் IAS அவர்கள் ஓராண்டு காலம் தடுப்பு காவலில் வைக்க ஆணையிட்டதின்பேரில் எதிரி ஓராண்டு குண்டர் தடுப்பு காவலில் வைக்கப்பட்டார்.
No comments:
Post a Comment