தமிழ்நாடு முதலைமைச்சர் மக்களை நாடி மக்கள் குறைகளை கேட்டு, உடனுக்குடன் தீர்வு காண அரசு இயந்திரம் களத்திற்கே வரும் உங்களைத் தேடி உங்கள் ஊரிலே என்ற புதிய திட்டத்தினை அறிவித்துள்ளார். இத்திட்டத்தின்படி, ஒவ்வொரு மாவட்ட ஆட்சியரும், இனி ஒவ்வொரு மாதமும், கடைசி புதன்கிழமை அன்று ஒருநாள் வட்ட அளவில் தங்கி கள ஆய்வில் ஈடுபட்டு, அரசு அலுவலகங்களை ஆய்வு செய்து, மக்களின் குறைகளை கேட்டறிந்து, அரசின் அனைத்து நலத்திட்டங்களும், சேவைகளும் பொதுமக்களுக்கு தங்குதடையின்றி மக்களை சென்றடைய உறுதி செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் கடலூர் மாவட்டத்தில் குறிஞ்சிப்பாடி வட்டத்தில் உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டத்தின்கீழ் நாளை 31.01.2024 அன்று களஆய்வு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.
உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் குறிஞ்சிப்பாடி வட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் சேவைகள், பல்வேறு அரசு அலுவலகங்கள் மூலம் பொதுமக்களுக்கு அளிக்கப்படும் சேவைகள், செயல்பாடுகள். திட்டங்கள் செயல்படுத்துவது தொடர்பாகவும், பொதுமக்களின் தேவைகள் மற்றும் கோரிக்கைகள் தொடர்பாகவும். மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஆய்வு மேற்கொள்ள உள்ளார். மேலும், அனைத்து துறை மாவட்ட அளவிலான அலுவலர்கள் களஆய்வு மேற்கொண்டு இக்களஆய்வு பணிகள் தொடர்பாக மதிப்பாய்வு பணிகள் மேற்கொள்ளபட உள்ளது.
மேலும், முதலமைச்சின் சிறப்பு திட்டமான முதலமைச்சரின் காலை உணவுதிட்டம், அரசு மருத்துவமனைகள், இ-சேவை மையங்கள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், நியாயவிலை கடைகள், வட்டார வளர்ச்சி அலுவலகம், வட்டாட்சியர் அலுவலகம், வருவாய் ஆய்வாளர்கள் அலுவலகம், கிராம நிர்வாக அலுவலர்கள் அலுவலகங்கள், கிராம ஊராட்சி அலுவலகம், சமூக பாதுகாப்பு திட்டங்கள் தொடர்பாகவும் பொதுமக்களுக்கு வழங்கப்படும் சேவைகள், போக்குவரத்து சேவைகள், பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்களின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும். அரசு விடுதிகள் ஆய்வு. திடக்கழிவு மற்றும் சுகாதார மேலாண்மைகள் உள்ளிட்ட பல்வேறு அரசின் திட்டங்கள் மற்றும் பொதுமக்களின் தேவைகள் குறித்து கள ஆய்வு மேற்கொண்டு உங்களைத் தேடி, உங்கள் ஊரில் திட்டம் தொடர்பாக நடத்தப்படும் ஆய்வில் பொதுமக்களின் சேவைகள் மற்றும் தேவைகள் தொடர்பாக தமிழக அரசுக்கு முன்மொழிவுகள் அனுப்பிவைக்கப்படும். உங்களைத் தேடி உங்கள் ஊரில் என்பது பல்வேறு சேவைகள் வழங்குவதை மேம்படுத்துவதற்கும் மற்றும் அரசின் பல்வேறு திட்டப்பணிகளை விரைவுபடுத்த வதற்கான திட்டமாகும் என கடலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அருண்தம்புராஜ் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment