கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே கிளாங்காடு கிராமத்தில் புதிய நியாய விலை கட்டிடம் வேண்டும் என்று கோரிக்கையை கிராம மக்கள் வைத்தனர்.அதன்படி மக்களின் கோரிக்கையை ஏற்று புவனகிரி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் அருண்மொழித்தேவன் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து நிதி ஒதுக்கப்பட்டு கட்டுமானப் பணிகள் நடைபெற்று வந்தன.அதன்பணிகள் முடிவுற்றபின் அதன் திறப்பு விழா நடைபெற்றது.
அதிமுக 1வதுவார்டு கவுன்சிலர் கார்த்திக் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கடலூர் மேற்கு மாவட்ட செயலாளரும், புவனகிரி அதிமுக சட்டமன்ற உறுப்பினருமான அருண்மொழித்தேவன் பங்கேற்று ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். பின்னர் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.இதில் அதிமுக நகரக் கழக மற்றும் கிளை கழக நிர்வாகிகள் ஏராளமானோர் பங்கேற்றனர்.
No comments:
Post a Comment