மேலும், ஆயங்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூ.48 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புறநோயாளிகள் பிரிவு கட்டிடத்தையும், வடலூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பொது சுகாதாரர் ்டிடத்தையும், ஒரத்தூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டிடத்தையும் மற்றும் திருவந்திபுரம், வடக்குத்து, கம்பளிமேடு ஆகிய 3 இடங்களில் தலா ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள துணை சுகாதார நிலைய கட்டிடத்தையும், கட்டியங்குப்பம் பகுதியில் ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள துணை சுகாதார நிலைய கட்டிடத்தையும், குருவப்பன்பேட்டை, கானூர், வேலங்கிபட்டு ஆகிய 3 இடங்களில் தலா ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள துணை சுகாதார நிலைய கட்டிடத்தையும் என ஆக மொத்தம் ரூ.4.53 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய மருத்துவ கட்டிடங்களை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தனர்.
மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள் தெரிவித்ததாவது, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் சீரிய திட்டமாக விளங்கக்கூடிய மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் வாயிலாக 45 வயதுக்கு மேற்பட்ட இரத்த அழுத்த நோயாளிகளின் வீடுகளுக்குத் நேரில் சென்று சிகிச்சை அளிக்கப்பட்டு அவர்களுக்குத் தேவையான மருந்து மாத்திரைகள் வழங்கப்படுகிறது. கலைஞரின் வரும்முன் காப்போம் திட்டம், இன்னுயிர் காப்போம் போன்ற திட்டங்களால் உயிரிழப்புகள் குறைந்து வருகிறது என தெரிவித்தார். மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் இதுவரை 1,72,625 பயனாளிகள் பயன்பெற்றுள்ளனர். தொடர் சேவை என்ற வகையில் 3,71,47,966 பயனாளிகள் பயன்பெற்றுள்ளனர். இன்னுயிர் காப்போம் நம்மை காக்கும் 48 மணி நேரம் திட்டத்தின்கீழ் இதுவரை 2,12,965 பயனாளிகள் பயனடைந்துள்ளனர்.
தமிழ்நாட்டில் 2023 ஆம் ஆண்டு 25 கிராமப்புர ஆரம்ப சுகாதார நிலையங்களும், 25 நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களும் அமைக்க தீர்மானித்ததில் புவனகிரி வட்டம், மஞ்சக்கொள்ளை பகுதியில் ஒரு ஆரம்ப சுகாதார நிலையமும், ஓரங்கூர் ஆரம்ப சுகாதார நிலையமும் அமையவுள்ளது. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஆணைப்படி தமிழ்நாட்டில் மருத்துவர், செவிலியர், சுகாதார ஆய்வாளர் மற்றும் உதவி ஆய்வாளர் என்கின்ற வகையில் 4 பணியாளர்களை கொண்ட 500 நகர்ப்புற நலவாழ்வு மையங்கள் அமைக்கப்படவுள்ளன.
இதில் கடலூர் மாநகராட்சியில் 6 நலவாழ்வு மையங்களையும், சிதம்பரம் நகராட்சியில் 1 நலவாழ்வு மையமும், நெல்லிக்குப்பம் நகராட்சியில் 1 நலவாழ்வு மையமும், பண்ருட்டி நகராட்சியில் 1 நலவாழ்வு மையமும், விருத்தாசலம் நகராட்சியில் 1 நலவாழ்வு மையமும் என கடலூர் மாவட்டத்தில் 10 இடங்களில் அனுமதிப்பட்ட நிலையில் கடலூர் மாநகராட்சியில் கட்டிமுடிக்கப்பட்ட 3 நலவாழ்வு மையமும், பண்ருட்டி நகராட்சியில் 1 நலவாழ்வு மையமும், விருத்தாசலம் நகராட்சியில் 1 நலவாழ்வு மையமும், சிதம்பரம் நகராட்சியில் 1 நலவாழ்வு மையமும் கடந்த 06.06.2023 அன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டை பொறுத்தவரை ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களின் எண்ணிக்கை 2,286 ஆகவும், துணை ஆரம்ப சுகாதார நிலையங்களின் எண்ணிக்கை 8,713 எனவும் உள்ளது. ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை ஆரம்ப சுகாதாரது நிலையங்கள் சிறந்த கட்டமைப்பை பெற்ற நிலையங்களுக்கு 2012 முதல் தேசிய தர நிர்ணய திட்ட விருதுகள் வழங்கப்பட்டதில் இதுவரை (12 ஆண்டுகள்) தமிழ்நாட்டில் இருந்து மட்டுமே 614 விருதுகள் பெறப்பட்டுள்ளன. அதிலும் குறிப்பாக தமிழ்நாடு முதலமைச்சர் பொறுப்பேற்ற பின்னரே 545 விருதுகள் கிடைக்கப்பெற்றன. இதில் கடலூர் மாவட்டம் மட்டுமே அதிகபட்சமாக 25 விருதுகள் பெற்றுள்ளன.
கடலூர் தலைமை அரசு மருத்துவமனை, சிதம்பரம்கள் அரசு மருத்துவமனை, விருத்தாசலம் அரசு மருத்துவமனை, டிநெடுஞ்சேரி ஆரம்ப சுகாதார நிலையம், சிறுப்பாக்கம் ஆரம்ப சுகாதார நிலையம், நெல்லிக்குப்பம் நகர்ப்புற ஆரம்ப கார் சுகாதார நிலையம், விருத்தாசலம் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம், கெஙஊர் மற்றும் ொண்டான் ஆரம்ப சுகாதார நிலையம், கடலூர் துறைமுகப் பகுதயில் உள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம், புதுப்பாளையம் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம், மதலப்பட்டு ஆரம்ப சுகாதார நிலையம், மனம்தவிழ்ந்தபுத்தூர் ஆரம்ப சுகாதார நிலையம், மேல்பட்டாம்பாக்கம் ஆரம்ப சுகாதார நிலையம், ஆவட்டி ஆரம்ப சுகாதார நிலையம், மங்கலம்பேட்டை ஆரம்ப சுகாதார நிலையம், காரைக்காடு சமுதாய ஆரம்ப சுகாதார நிலையம், அரசக்குழி ஆரம்ப சுகாதார நிலையம், குண்டியமல்லூர் ஆரம்ப சுகாதார நிலையம், கீரனூர் ஆரம்ப சுகாதார நிலையம், கிள்ளை ஆரம்ப சுகாதார நிலையம், திருவந்திபுரம் ஆரம்ப சுகாதார நிலையம், தூக்கணாம்பாக்கம் ஆரம்ப சுகாதார நிலையம், கீழ்அருங்குணம் ஆரம்ப சுகாதார நிலையம், வடலூர் சமுதாய சுகாதார நிலையம் என்ற நிலையங்களும் விருதுகள் பெற்றுள்ளன.
பிறப்பு விகிதம் இந்திய அளவிலான சுகாதாரக் குறியீடு 19.5 என்ற நிலையில் தமிழ்நாட்டின் சராசரி 13.8 என உள்ளது. கடலூர் மாவட்டம் 8.9 என்ற அளவில் சராசரி உள்ளது. அதேபோல் இறப்பு விகிதம் இந்திய அளவிலான சுகாதாரக் குறியீடு 6 என்ற நிலையில் தமிழ்நாட்டின் சராசரி 6.1 எனவும் அதில் கடலூர் மாவட்டம் 3.3 என்ற அளவில் சராசரி உள்ளது. பிறப்பின் போது குழந்தை இறப்பு விகிதம் இந்திய அளவிலான சராசரி 28 என்ற நிலையில் தமிழ்நாட்டின் சராசரி 13 என பாதியாக உள்ளது. கடலூர் மாவட்டத்தில் குழந்தை இறப்பு சராசி 7.3 என்ற வகையில் சிறப்பாக செயலாற்றி வருகிறது என தெரிவித்தனர்.
இந்நிகழ்ச்சியில் கடலூர் சட்டமன்ற உறுப்பினர் கோ.ஐயப்பன், காட்டுமன்னார்கோயில் சட்டமன்ற உறுப்பினர் ம.சிந்தனைச்செல்வன், மாவட்ட வருவாய் அலுவலர் ம.இராஜசேகரன், அரசு கடலூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் மற்றும் சிறப்பு அதிகாரி மரு.சி.திருப்பதி, இணை இயக்குநர், மருத்துவம் நலப்பணிகள் மரு.ஹீரியன் ரவிக்குமார், துணை இயக்குநர் சுகாதார பணிகள் மரு.எம்.கீதாராணி மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் சுகாதார துறை அலுவலர்கள் உள்ளனர்.
No comments:
Post a Comment