கடலூர் மாவட்டம் நெய்வேலி என்.எல்.சி இந்தியா நிறுவனத்தின் கீழ் உள்ள, NLC பொது மருத்துவமனையில், கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்து வந்த உதவி செவிலியர், மகப்பேறு உதவியாளர், ஆய்வக தொழில்நுட்ப வல்லுநர், எக்ஸ்ரே தொழில்நுட்ப வல்லுநர், மற்றும் இயன்முறை மருத்துவர் என 30 க்கும் மேற்பட்டோரை பணிபுரிந்து வந்தனர் இந்நிலையில் ஒப்பந்தகாலம் முடிவடைந்து விட்டது என்று கூறி, கடந்த 2023 ஆம் ஆண்டு பணியை விட்டு நீக்கியது இதனால் பாதிக்கப்பட்ட மருத்துவ ஊழியர்கள், பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்திய நிலையில் என்எல்சி நிர்வாகத்துடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் மீண்டும் ஒரு மாத காலம் பணி நீடிப்பு வழங்கியது, இந்நிலையில் வழங்கிய காலமும் இன்னும் இரு தினங்களில் முடிவடைவதால் என்எல்சி நிர்வாகம் தரப்பில் மீண்டும் பணிக்கு வர வேண்டாம் என என்எல்சி நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இதனால் அதிர்ச்சி அடைந்த ஒப்பந்த ஊழியர்கள் என்எல்சி மருத்துவமனை நுழைவாயில் முன்பு உண்ணாவிர போரட்டத்தில் தற்பொழுது ஈடுபட்டு வருகின்றனர், மேலும் அவர்கள் தெரிவிக்கையில் கொடிய நோயான கொரோனா நோய் தொற்றுக் காலத்தில் எங்கள் உயிரைப் பணயம் வைத்து பணி மேற்கொண்டுள்ளோம் ஆனால் ஒப்பந்தம் முடிந்ததாக கூறி திடீரென எங்களை வேலையை விட்டு நிறுத்தி விட்டு புதிய ஆட்களை பணி அமர்த்துவதில் என்எல்சி நிர்வாகம் முழு வீச்சில் ஈடுபட்டு வருகின்றது.
எனவே எங்களின் வாழ்வாதாரத்தை காக்க எங்களுக்கு வழங்கப்பட்ட ஒப்பந்த அடிப்படையில் ஆன பணியை தொடர்ந்து வழங்க வேண்டும் என்று தெரிவித்தனர்.
- நெய்வேலி செய்தியாளர் வீ.வினோதினி.
No comments:
Post a Comment