இக்கூட்டத்தில் குறிஞ்சிப்பாடி , அண்ணாமலை நகர் , காட்டுமன்னார்கோயில், கிள்ளை, புவனகிரி, ஸ்ரீமுஷ்னம், சேத்தியாதோப்பு, லால்பேட்டை, கெங்கைகொண்டான் மற்றும் பரங்கிப்பேட்டை ஆகிய பேரூராட்சிகளில் மேற்கொள்ளப்பட்டுவரும் திட்டப்பணிகளின் முன்னேற்றம் குறித்து வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் அவர்களால் விரிவான ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
2021-2022ஆம் ஆண்டில் பல்வேறு திட்டங்களின் கீழ் ரூ.3486.39 இலட்சம் மதிப்பீட்டில் 126 பணிகள் மேற்கொள்ளப்பட்டதில் 115 பணிகள் முடிவுற்றுள்ளது. மேலும் 11 பணிகள் நடைபெற்று வருகின்றன. 2022-2023 ஆம் ஆண்டில் பல்வேறு திட்டங்களின்கீழ் ரூ.3871.34 இலட்சம் மதிப்பீட்டில் 184 பணிகள் மேற்கொள்ளப்பட்டதில் 80 பணிகள் முடிவுற்றுள்ளது, மேலும் 104 பணிகள் நடைபெற்று வருகின்றன. 2023-2024ஆம் ஆண்டில் பல்வேறு திட்டங்களின் கீழ் ரூ.6118.66 இலட்சம் மதிப்பீட்டில் 105 பணிகள் மேற்கொள்ளப்பட்டதில் 11 பணிகள் முடிவுற்றுள்ளது, மேலும் 94 பணிகள் நடைபெற்று வருகின்றன.
குறிஞ்சிப்பாடி பேரூராட்சியில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் பேருந்து நிலையம் சீரமைக்கும் பணி ரூ .482.80 லட்சத்தில் மேற்கொள்ளப்பட்டு, 90 சதவிகித பணிகள் முடிக்கப்பட்டு, பேருந்து நிலைய பணிகள் முடியும் தருவாயில் உள்ளது. மேலும் இப்பேரூராட்சியில் ரூ .142 லட்சத்தில் எரிவாயு தகனமேடை அமைக்கும் பணி தொடங்கப்பட்டு 75 சதவிகித பணிகள் முடிவுற்றுள்ளது மற்றும் ஸ்ரீமுஷ்ணம் பேரூராட்சியில் ரூ .167 லட்சத்தில் எரிவாயு தகனமேடை அமைக்க பணி ஆணை வழங்கப்பட்டு, பணிகள் நடைபெற்று வருகிறது. காட்டுமன்னார்கோயில் பேரூராட்சியில் TURIP திட்டத்தின்கீழ் ரூ.120 லட்சத்தில் சாலை அமைக்கும் பணி முடிவுற்றுள்ளது.
இப்பேரூராட்சிகளில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டம், நமக்கு நாமே திட்டம், மாநில நிதி பகிர்வு திட்டம், தூய்மை இந்தியா திட்டம் 2.0, அம்ரூத் 2.0, 15வது நிதிக்குழு மான்யத் திட்டம் மற்றும் பல்வேறு திட்டப்பணிகளின் நிலைக்குறித்து ஆய்வு செய்து, நிலுவையில் உள்ள பணிகளை விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் அவர்கள் அறிவுறுத்தினார்.
இக்கூட்டத்தில் கடலூர் மண்டல பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் அவர்கள், உதவி செயற்பொறியாளர், செயல் அலுவலர்கள், இளநிலை பொறியாளர்கள் துறை சார்ந்த அலுவலர்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிகள் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment