கடலூர் பைபாஸ் ரோடு சிபிஎஸ் கார்டன் அருட்பெருஞ்ஜோதி வள்ளலார் கோவில் பராமரிப்பு மற்றும் சேவை அறக்கட்டளை சார்பாக 12 ஆம் ஆண்டு தைப்பூச திருவிழா நடைபெற்றது. தைப்பூசத்தை முன்னிட்டு திரு அருட்பெருஞ்ஜோதி அகல் பாராயணம் நடைபெற்றது. பின்னர் தீபாரதனை காண்பிக்கப்பட்டது, பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
தைப்பூசத்தை முன்னிட்டு ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை என்ற கோஷத்துடன் வள்ளலாரை தரிசித்தனர். தைப்பூச நிகழ்ச்சியை அருட்பெருஞ்ஜோதி வள்ளலார் குடில் பராமரிப்பு மற்றும் சேவை அறக்கட்டளை அறங்காவலர்கள் ஏ. விஜயா, பி .அச்சுதன், புதுப்பாளையம் மெயின் ரோடு சிவசக்தி குடில் வள்ளி கந்தன் நகர் சுவாமி மேகானந்தா சரஸ்வதி, ஜி. பன்னீர்செல்வம், உச்சிமேடு ஆனந்தன், ஆகியோர் செய்தனர். விழாவில் கூத்தப்பாக்கம், பாதிரிகுப்பம் எம். புதூர், மாவடி பாளையம் ,அரிசி பெரியாங்குப்பம், யுனிவர்சல் டவுன்ஷிப் நகர் ,சி. பி. எஸ் கார்டன், கே. என். பேட்டை, திருவந்திபுரம் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து மாலை வரை பொதுமக்கள் சாரை சாரையாக வந்து வள்ளலாரை தரிசனம் செய்தனர்.
No comments:
Post a Comment