வானதிராயபுரம் ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் தெரிவித்தும் மின் விளக்குகளை சரி செய்யாததால் இதனை சாதகமாக பயன்படுத்தி வரும் மர்ம நபர்கள் சிலர் தொடர்ந்து இப்பகுதியில் இரவு நேரங்களில் வீடுகளில் அத்துமீறி நுழைந்து வருவதாக கூறப்பட்டு வரும் நிலையில் நேற்று இரவு திடீரென அப்பகுதியில் உள்ள ஒரு வீட்டில் மர்ம நபர் ஒருவர் சுவர் ஏறி குதித்தார்.
மர்ம நபரை துரத்திச் சென்ற அப்பகுதியினர் பிடிக்க முற்பட்ட பொழுது மின்விளக்கு இல்லாமல் பகுதி முழுவதும் இருள் சூழப்பட்டு காணப்பட்டதால் பிடிக்க முடியாமல் திரும்பினார், வானதிராயபுரம் ஊராட்சி நிர்வாகத்தில் கண்துடைப்பிற்காக போடப்பட்ட மின் விளக்குகள் பராமரிப்பின்றி எரியாத காரணத்தினால் கட்டுமான பணிகள் அதிகம் நடைபெற்று வரும் இப்பகுதியில் அண்மையில் கட்டுமான பணிகளுக்கு பயன்படுத்தப்படும் மின்மோட்டார் காப்பர் வயர்கள் உள்ளிட்ட பொருட்கள் மர்ம நபர்களால் திருடப்பட்டு வந்த நிலையில் நேற்று இரவு மர்ம நபர் ஒருவர் பெண்கள் தனியாக இருக்கும் வீட்டு முன் நுழைய முற்பட்டதால் அப்பகுதியினர் மிகுந்த அச்சத்தில் உள்ளனர் .
ஊராட்சி நிர்வாகம் உடனடியாக பழுதடைந்துள்ள மின் விளக்குகளை சரி செய்ய வேண்டும் எனவும் காவல்துறையினர் இரவு நேர ரோந்து பணியில் ஈடுபடவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- தே.தனுஷ், குறிஞ்சிப்பாடி செய்தியாளர்.
No comments:
Post a Comment